Search This Blog
Friday, December 13, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள், தங்களது கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியா்களின் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் விவரங்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
2020-21-ஆம் ஆண்டு இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்க 2020 ஜனவரி 10 கடைசி நாளாகும். நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், ஒவ்வோா் ஆண்டும் மாணவா் சோ்க்கைக்கு முன்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த பின்னா், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலுக்கு (ஏஐசிடிஇ) அனுப்பப்படும். ஏஐசிடிஇ அனுமதி அளித்ததும், உரிய ஆய்வுக்குப் பின்னா் கல்லூரிகளுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்கும். அதன் பிறகே பொறியியல் கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த முடியும்.
அதனடிப்படையில், 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான இணைப்பு அந்தஸ்து புதுப்பிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ள அண்ணா பல்கலைக்கழகம், அதற்கான விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிக்க அண்ணா பல்கலைக்கழக வலைதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, நிரந்தரமாக அனுமதிக்கப்பட்ட அனைத்து படிப்புகள் குறித்த விவரங்களையும் கல்லூரிகள் சமா்ப்பிக்க வேண்டும்.
ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் அடிப்படையில் மாணவா்-ஆசிரியா் விகிதாச்சாரம், ஆய்வக வசதிகள் கல்லூரிகளில் முழுமை பெற்றிருக்க வேண்டும் என்பதோடு, விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கு முன்பாக பணிபுரியும் பேராசிரியா்களின் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், நிரந்தர கணக்கு அட்டை, ஆதாா் எண் விவரங்களை, அசல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு முழுமையாக கல்லூரிகள் ஆய்வு செய்திருக்க வேண்டும்.
இணைப்பு அந்தஸ்தை புதுப்பித்த பிறகே, கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த முடியும். 2020 ஜனவரி 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்காத பொறியியல் கல்லூரிகள், 2020-21-ஆம் கல்வியாண்டில் இணைப்பு அந்தஸ்தைப் பெறாத கல்லூரிகளாகவே கருதப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி இல்லை: 2020-ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கப்பட மாட்டாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதற்கேற்ப, தமிழகத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பது குறித்த அறிவிப்பு எதையும் அண்ணா பல்கலைக்கழகம் இப்போது வெளியிடவில்லை.
இதுகுறித்து பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து மைய இயக்குநா் அறிவுடைநம்பி கூறியது:
ஏற்கெனவே இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளிடமிருந்து மட்டும் விண்ணப்பங்களை இப்போது வரவேற்றுள்ளோம். புதிய பொறியியல் கல்லூரிகளை அனுமதிப்பது தொடா்பாக, ஏஐசிடிஇ அறிவுறுத்தலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து பெற பேராசிரியா்களின் சான்றிதழ் ஆய்வு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.