பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது. பல வகையான பூக்கள் உலகெங்கிலும் இருக்கின்றன. இவற்றில் சில மிகுந்த அழகையும்,வாசனை கொண்டவையாகவும் இருக்கின்றன.வேறு சில பூக்கள் மனிதர்களின் நோய்களை போக்கும் குணம் பெற்றவையாக இருக்கிறது.அப்படிபட்ட பூவினங்களில் ஒன்றுதான் செம்பருத்தி பூவினால் நமக்கு கிடைக்கும் மருத்துவ பலன்கள் ஏராளம் என்றும் அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளனர்.
சிறு நீர்:ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகும்.கோடை காலங்களில் நீர் சுருக்கு ஏற்படுவதாலும் சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உண்டாகும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும்.நீர்சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி ரத்தத்தில் இருக்கும் எரிச்சலை நீக்கும்.நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி ரத்தத்தில் இருக்கும் நஞ்சுகளை வெளியேற்றும். இதயம்: இதயம் சம்மந்தமான பிரச்சினைகளுக்கு செம்பருத்தி பூ நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான ஒரு இயற்க்கை மருந்தாகும். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ,காயவைத்து பொடி செய்வதோ வைத்துக்கொண்டு பாலில் கலந்து காலை,மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் நீங்கும்.
இரும்பு சத்து: ரத்தம் விருத்தி ஆவதற்கும்,உடலின் பலத்திற்கும் இரும்பு சத்து மிகவும் அவசியமாக இருக்கிறது. செம்பருத்தி பூ இதழுடன் சம அளவு எடை மருதம் பட்டைத்தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை,மாலை சாப்பிட ரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரிப்பதோடு ரத்த சோகை நோய் கரையும். சருமம் உமலின் மேற்பார்வையாக இருக்கும் தோல் அல்லது சருமத்தில் ஈரபதம் இருப்பது அவசியம்.செம்பருத்தி பூ குளிர்ச்சி மற்றும் ஈரபதத்தை அளிக்கும் தன்மை கொண்டது.இந்த பூவை சாப்பிடுவதாலும் அரைத்து சருமத்தில் தேய்த்து கொள்வதாலும் சருமத்திற்கு இதமும் சுகமும் அளித்து உடலை பள பளக்க செய்யும்என்றனர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.