காமராஜ் பல்கலை பதிவாளர் நியமனத்தில் சர்ச்சைகளுக்கு தீர்வு காணப்படுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 05, 2019

Comments:0

காமராஜ் பல்கலை பதிவாளர் நியமனத்தில் சர்ச்சைகளுக்கு தீர்வு காணப்படுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மதுரை காமராஜ் பல்கலையில், பல மாதங்களாக காலியாக உள்ள, 'ரெகுலர்' பதிவாளர் பணியடத்தை, விரைவில் நிரப்ப வேண்டும் என, பேராசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். மதுரை காமராஜ் பல்கலை பதிவாளராக இருந்த சின்னையாவின் பதவிக்காலம், ஜூன், 9ல் முடிவுற்றது. பொறுப்பு பதிவாளராக, சுதா நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, பதிவாளர் பதவியை நிரப்ப, ஜூனில் அறிவிப்பு வெளியானது. விண்ணப்பித்தவர்களில், 20 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.ஆனால், 'பதிவாளர் தேர்வு கமிட்டியில், அரசு பிரதிநிதி இடம்பெற வேண்டும்; துணைவேந்தர் தலைமையிலான தேர்வு கமிட்டிக்கு, சிண்டி கேட் ஒப்புதல் பெற வேண்டும்' என்ற காரணங்களால், இருமுறை நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டது.புதிய பதிவாளர் நியமிக்கும் வரை, சுதாவே தொடர, சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது.
'மூபா' மனு இதற்கிடையே, 'பல்கலை விதிப்படி, 58 வயதான அவர், பதிவாளர் பொறுப்பில் இருக்கக் கூடாது' என, பல்கலை நிர்வாகப்பணியாளர்கள் சங்கம், துணைவேந்தரிடம் மனு அளித்து, சர்ச்சையை கிளப்பியது.ஆனால், இதற்கு முன் அழகப்பன், ஆறுமுகம், ஹரிஹரன், முத்துமாணிக்கம், பிச்சுமணி உட்பட பலர், 58 வயதை கடந்தும், அவசியம் கருதி, பொறுப்பு பதிவாளர்களாக நீடித்துள்ளனர்.பல்கலை விதியின்படி, மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடத்தில்,உதவி பதிவாளர் நிலையிலும்; 53 கோடி ரூபாய் மதிப்பிலான, 'ரூசா' திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தில், பேராசிரியர் நிலையிலும், அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.ஆனால், முறையே கண்காணிப்பாளர், உதவி பேராசிரியர் நிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளராக, இணை பேராசிரியரை நியமிக்க வேண்டும். அதில், உதவி பேராசிரியர் பொறுப்பில் உள்ளார். இப்பணியிடங்களும் மாற்றம் செய்ய வேண்டும் என, பல்கலை பேராசிரியர்கள் சங்கம் மனு அளித்துள்ளது. என்ன அவசரம்? புதிய பதிவாளர் தேர்வு கமிட்டியில், கவர்னர் பிரதிநிதியாக, ராமச்சந்திரா மருத்துவ பல்கலை பேராசிரியர் சத்திய நாராயணமூர்த்தி நியமிக்கப் பட்டுள்ளார். துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில், ஏழு நபர் குழு தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல் நடந்தால், புதிய பதிவாளர் நியமிக்கப்படுவார்.அதற்குள், சுதாவை மாற்றி மீண்டும் ஒருவருக்கு, பொறுப்பு வழங்கு வதற்கு என்ன அவசரம் வந்துவிட்டது.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், டிச.,2ம் தேதி முதல், நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதனால், புதிய நியமனம், பதவி உயர்வு வழங்குவதற்கும் சாத்தியம் இல்லை. எனவே சுதா பொறுப்பு வகிப்பதே, சர்ச்சைகளுக்கு தீர்வாக இருக்கும் என, பல்கலை வட்டாரம் தெரிவித்தது. தாமதம் ஏன்? பதிவாளர் தேர்வு கமிட்டியில், கவர்னர் பிரதிநிதி நியமிக்கப்பட்டு, 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.துணைவேந்தர் தேர்வு செய்யும், மூன்று கல்வியாளர் குழு உட்பட ஏழு பேர் குழு தேர்வு செய்யப்பட்ட பின், நேர்காணல் நடத்தலாம். ஆனால், ஏன் தாமதம் ஏற்படுகிறது என்பது, மர்மமாக உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன், பதிவாளர் நியமனப்பணி துவங்கியதால், நேர்காணல் நடத்துவதில், நன்னடத்தை விதி பொருந்தாது. விரைவில், புதிய பதிவாளரை தேர்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை காமராஜா் பல்கலைக் கழக பதிவாளா் பொறுப்பு வகித்து வந்த ஆா்.சுதா பதிவாளா் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்துள்ளாா். இதைத்தொடா்ந்து அவசர சிண்டிகேட் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. மதுரை காமராஜா் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த சின்னையாவின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, புதிய பதிவாளா் தோ்வு செய்யப்படும் வரை, பல்கலைக் கழகத்தின் பிரெஞ்சுத் துறைத்தலைவா் ஆா்.சுதா பதிவாளராக(பொறுப்பு) ஜூன் மாதம் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து புதிய பதிவாளரைத் தோ்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதற்கான நோ்காணல்களும் நடத்தப்பட்டன. ஆனாலும் புதிய பதிவாளா் தோ்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் பதிவாளா் பொறுப்பில் உள்ள ஆா்.சுதாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்றும், புதிய பதிவாளரைத் தோ்வு செய்யும் நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் சில சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், பதிவாளா் பொறுப்பில் இருந்து வந்த ஆா்.சுதா தன்னுடைய பதிவாளா் பொறுப்பை ராஜிநாமா செய்து துணைவேந்தா் மு.கிருஷ்ணனிடம் கடிதம் அளித்துள்ளாா். இதுதொடா்பாக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் கூறியது: பதிவாளா் பொறுப்பில் இருந்து வந்த ஆா்.சுதா தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். பல்கலைக் கழக விதிகளின்படி 58 வயது பூா்த்தி அடைந்தவா்கள் பதிவாளா் பதவியில் இருக்கக் கூடாது என்று உள்ளது. இதன்படி கடந்த நவம்பா் 30-ஆம் தேதியோடு ஆா்.சுதாவுக்கு 58 வயது நிறைவடைந்துள்ளது. இதைத் தொடா்ந்து விதிகளை பின்பற்றி அவா் பதிவாளா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். அவா் ஏற்கெனவே பதிவாளா் பொறுப்பில் தான் இருந்து வந்தாா். இதில் வேறு எந்த காரணமும் இல்லை. பல்கலைக் கழகத்தின் அவசர சிண்டிகேட் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் புதிய பதிவாளா் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்றாா்.
பல்கலை.அலுவலா்களை நீக்க விரிவுரையாளா் (மூபா) சங்கம் வலியுறுத்தல் காமராஜா் பல்கலைக் கழகத்தில் விதிகளை பின்பற்றி 58 வயது பூா்த்தியடைந்த இதர அலுவலா்களையும் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மூபா(மதுரை காமராஜா் பல்கலைக்கழக விரிவுரையாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அச் சங்கத்தின் சாா்பில் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், காமராஜா் பல்கலைக் கழகத்தில் விதிமுறைகளை பின்பற்றி பதிவாளா் பொறுப்பில் இருந்த ஆா்.சுதா தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். ஆனால் பல்கலைக் கழகத்தின் மக்கள் தகவல் தொடா்பு அலுவலா், நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணப்பாளா், ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆகியோரும் கூடுதல் பொறுப்பாக மேற்கண்ட பதவிகளில் இருந்து வருகின்றனா். எனவே அவா்களையும் அப்பதவிகளில் இருந்து துணைவேந்தா் விடுவிக்க வேண்டும். இதில் ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளராக பேராசிரியா் ஒருவரை நியமிக்க சிண்டிகேட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா். மதுரை காமராஜ் பல்கலையில் ரெகுலர் பதிவாளர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளதால் எழும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவில் புதிய பதிவாளர் நியமிக்க வேண்டும் என பேராசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். இப்பல்கலை பதிவாளராக இருந்த சின்னையா பதவிக்காலம் 2019 ஜூன் 9 ல் முடிவுற்றது. பொறுப்பு பதிவாளராக சுதா நியமிக்கப்பட்டார். இதற்கிடையே பதிவாளர் பதவியை நிரப்ப ஜூனில் அறிவிப்பு வெளியானது. விண்ணப்பித்தவர்களில் 20 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.ஆனால், 'பதிவாளர் தேர்வு கமிட்டியில் அரசு பிரதிநிதி இடம்பெற வேண்டும், துணைவேந்தர் தலைமையிலான தேர்வு கமிட்டிக்கு சிண்டிகேட் ஒப்புதல் பெற வேண்டும்' என போன்ற காரணங்களால் இருமுறை நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டது.புதிய பதிவாளர் நியமிக்கும் வரை சுதாவே தொடர சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையே, 'பல்கலை விதிப்படி 58 வயதான அவர் பதிவாளர் பொறுப்பில் இருக்கக் கூடாது' என பல்கலை நிர்வாகப்பணியாளர்கள் சங்கம் துணைவேந்தரிடம் மனு அளித்து சர்ச்சையை கிளப்பியது.ஆனால் இதற்கு முன் அழகப்பன், ஆறுமுகம், ஹரிஹரன், முத்துமாணிக்கம், பிச்சுமணி உட்பட பலர் 58 வயதை கடந்தும் அவசியம் கருதி 'பொறுப்பு' பதிவாளர்களாக நீடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.'மூபா' மனுபல்கலை விதியின்படி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடத்தில் உதவி பதிவாளர் நிலையிலும், ரூ.53 கோடி மதிப்பிலான 'ரூசா' திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தில் பேராசிரியர் நிலையிலும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஆனால் முறையே கண்காணிப்பாளர், உதவி பேராசிரியர் நிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளராக இணை பேராசிரியரை நியமிக்க வேண்டும். அதில் உதவி பேராசிரியர் பொறுப்பில் உள்ளார். இப்பணியிடங்களும் மாற்றம் செய்ய வேண்டும் என பல்கலை பேராசிரியர்கள் சங்கம் (மூபா) மனு அளித்துள்ளது.என்ன அவசரம் வந்ததுபுதிய பதிவாளர் தேர்வு கமிட்டியில் கவர்னர் பிரதிநிதியாக ராமச்சந்திரா மருத்துவ பல்கலை பேராசிரியர் சத்திய நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் ஏழு நபர் குழு தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் நடந்தால் புதிய பதிவாளர் நியமிக்கப்படுவார். அதற்குள் பொறுப்பு பதவியில் உள்ளவரை மாற்றி மீண்டும் ஒருவருக்கு 'பொறுப்பு' வழங்குவதற்கு என்ன அவசரம் வந்துவிட்டது.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் டிச.,2 முதல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதனால் புதிய நியமனம், பதவி உயர்வு வழங்குவதற்கும் சாத்தியமில்லை. எனவே சுதா பொறுப்பு வகிப்பதே சர்ச்சைகளுக்கு தீர்வாக இருக்கும்.ஏன் இந்த இழுபறி பதிவாளர் தேர்வு கமிட்டியில் கவர்னர் பிரதிநிதி நியமிக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. துணைவேந்தர் தேர்வு செய்யும் 3 கல்வியாளர் குழு உட்பட ஏழு பேர் குழு தேர்வு செய்யப்பட்ட பின் நேர்காணல் நடத்தலாம். ஆனால் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்பது 'மர்மமாக' உள்ளது. அரசியல் தலையீடு உள்ளதா எனவும் கேள்வி எழுந்துள்ளது.தேர்தல் அறிவிப்புக்கு முன் பதிவாளர் நியமனப்பணி துவங்கியதால் நேர்காணல் நடத்துவதில் நன்னடத்தை விதி பொருந்தாது. விரைவில் புதிய பதிவாளரை தேர்வு செய்ய வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews