பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.12.19 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 08, 2019

Comments:0

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.12.19


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups

திருக்குறள்

அதிகாரம்:நிலையாமை

திருக்குறள்:339


உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

விளக்கம்:

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.

பழமொழி

Example is better than precept

சொல்வதை விட செய்வதே மேல்

இரண்டொழுக்க பண்புகள்

1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி

ஒரு வாழ்வியல் அனுபவம் நூறு புத்தகத்திற்கு சமம்.மூடர்களை விழித்தெழ வைக்கும்.

      -----வின்ஸ்டன் சர்ச்சில்

பொது அறிவு

1. தமிழ் நாட்டின் சிரபுஞ்சி எது?

வால்பாறை

2. தமிழ் நாட்டின் ஆக்ஸ்போர்டு எது?

பாளையங்கோட்டை

English words & meanings

1. Acoustics – science of sound.  ஒலியியல்.  திண்மம், நீர்மம், வளிமம் ஆகியவற்றினூடாகக் கடத்தப்படும் ஒலி அலைகள் பற்றி ஆய்வுசெய்யும் அறிவியல் ஆகும்.

2. Absorbed - giving all your attention to something.

முழு ஈடுபாடு கொண்ட, மனம் ஒன்றிய.

ஆரோக்ய வாழ்வு

 இன்றைய நாட்டு ம                  அகத்திக்கீரை சாறு,இதன் பூவின் சாறு இரண்டையும் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தொடர் தும்மல் நீங்கும்..

Some important  abbreviations for students

YOLO – you only live once

TL --  too long

நீதிக்கதை

இரண்டு அணில்கள்


இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறை சிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம். அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது. திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும்.

அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை. உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே. உங்களுக்கு நன்றி என்றது.

இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டார் என்று கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல் என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது. பக்தியுள்ள அணில் சொன்னது, கடவுளை நம்புகிற நாங்கள் எல்லாம் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவது இல்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போவதும் இல்லை.

அதனால் கடவுள் என்னை கீழே தள்ளி விட்டாலும் அதிலும் காரணம் இருக்கும் என்றது. ஆமாம். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுவதில்லை. மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது. கண்களை மூடி விண்ணை நோக்கி கடவுளே இந்த அவமானத்துக்கும் வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடு என்றது. அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது.

அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்தது. உன் பக்கத்துல பாம்பு என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது. தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது. சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம். அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம். நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடம் ஏது.

திங்கள்
தூய தமிழ் சொற்கள் அறிவோம்

புஷ்பம் - மலர்
உஷார் - எச்சரிக்கை, நோட்புக் - குறிப்பேடு, இலாபம் - வருவாய், ஆராதனை - வழிபாடு

இன்றைய செய்திகள்

09.12.19


* தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் தகவல்.

* மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு நாடு முழுவதும் 2,400 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 8) நடைபெற்றது.

* தமிழகத்தில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகளை எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் வரும் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

* தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் சீனியா் மகளிா் பளுதூக்குதலில் தமிழக வீராங்கனை அனுராதா தங்கப் பதக்கம் வென்றாா்.

* முத்தரப்பு ஜூனியா் மகளிா் ஹாக்கிப் போட்டியில் நியூஸிலாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

Today's Headlines

🌸 There is a chance of heavy rain in southern districts- weather department.

🌸Central Government Teacher's Eligibility Test was conducted in 2,400 centres in all over the country on 8th December, the Sunday.

🌸 Those who want to write the +1 and +2 public exam which is going to held on March can start to apply now.

🌸 In South Asian Athletic meet in the Senior Women Weight lifting Tamil Player Anuradha won Gold medal.

🌸 India beat New Zealand 4-1set in 3-Nations women's junior hockey tournament.

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews