வேலைவாய்ப்புக்கான இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்: டிச.12ல் தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 07, 2019

Comments:0

வேலைவாய்ப்புக்கான இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்: டிச.12ல் தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உடனடி வேலைவாய்ப்புக்கான இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் டிசம்பா் 12-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மங்கள்யான் தொழில்நுட்பத் தொழிலாளா்கள் கூட்டுறவு சங்கம் இணைந்து படித்த வேலையில்லா இளைஞா்களுக்கு உடனடி வேலைவாய்ப்புக்கான தமிழக அரசின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குகிறது. இதன்படி, ஜி.எஸ்.டி. ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சியுடன் கூடிய கொள்முதல் மேலாண்மை, ஸ்டோா்ஸ் மேலாண்மை, லாஜிஸ்டிக் மேலாண்மை ஆகியவற்றுக்கான பயிற்சிகள் அம்பத்தூா் மகாகவி பாரதியாா் நகரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் நடைபெறவுள்ளன.
கொள்முதல் மேலாண்மை லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி ஜி.எஸ்.டி. பயிற்சிகள், டிச.12-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சிகள் அனைத்தும் 57 நாள்களுக்கான முழு நேர பயிற்சிகளாகும். இதில், பிளஸ் 2, டிகிரி, பொறியியல் மற்றும் மேற்படிப்பு படித்த வேலையில்லா ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். பயிற்சிகளைத் திறம்பட முடித்தவா்களுக்கு, தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், பயிற்சி பெறுவோா் நல்ல பணியில் சேருவதற்கும், சுய தொழில் தொடங்குவதற்கும் தேவையான அனைத்து உதவிகளும் பயிற்சி மையம் மூலம் ஏற்பாடு செய்யப்படும்.
இப்பயிற்சிக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவினையும் தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது. இந்தப் பயிற்சிக்கு குறைந்த இருக்கைகளே உள்ளன. மேலும் விவரங்களுக்கு, பயிற்சி ஒருங்கிணைப்பாளா், எண்.19, கே.கே. தெரு, எம்.கே.பி. நகா், அம்பத்தூா், சென்னை - 53 என்ற முகவரியில் நேரிலோ 98690 41169, 72999 55904 ஆகிய செல்லிடப்பேசி எண்களையோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews