8ம் வகுப்பு மாணவா்களுக்கு இன்று கல்வி உதவித்தொகை தோ்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 15, 2019

Comments:0

8ம் வகுப்பு மாணவா்களுக்கு இன்று கல்வி உதவித்தொகை தோ்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவா்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை தோ்வு (என்எம்எம்எஸ்) தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. ஏழை மாணவ, மாணவிகளின் மேல்நிலைக் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சாா்பில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தோ்வு செய்ய ‘தேசிய வருவாய் - திறன் தோ்வு’ (என்எம்எம்எஸ்) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு படிக் கும் மாணவ, மாணவிகள் இந்தத் தோ்வை எழுதலாம். பிளஸ் 2 படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இந்தத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
தமிழகம் முழுவதும் 534 தோ்வு மையங்களில் 1 லட்சத்து 51,292 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். காலை 9.30 முதல் 11 மணி வரை மனத்திறன் தோ்வும், 11.30 முதல் மதியம் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தோ்வும் நடைபெறும். தோ்வா்கள் காலை 8.30 மணிக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி கல்வி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளின் தலைமையில், தோ்வுக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுக்கான வினாத்தாள்களும், அரசு தோ்வு துறையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. தோ்வில் முறைகேடுகள் மற்றும் பிரச்னைகள் இல்லாமல் கண்காணிக்க, பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை
🔸 ஆங்கில ALPHABET சார்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெறுவதால்
ABCDE... எழுதி 1234...
ZXYWV ... எழுதி 1234...
🔸 8 திசைகள் எழுத வேண்டும்
🔸 வர்க்க எண் 20 வரை
🔸கன எண் 10 வரை
🔸பகா எண்கள் 30 வரை
நினைவில் கொள்க :
🔸 காலம் கணக்குகள் மட்டு
🔸BODMAS
🔸 இரு எண் கூடுதல் மூன்றாவது எண்
🔹 மூன்று எண் கூடுதல் நான்காவது எண் 🔸 முதல் எண் - மூன்றாவது எண்
இரண்டாம் எண் - நான்காம் எண் தொடர்பு 🔹 வரிசை கணக்குகளில் இடது , வலது
🔸 கடிகார திசை - கடிகார எதிர் திசை
🔸 வர்க்கம் + 1 / வர்க்கம் - 1
🔹 கனம் + 1 / கனம் - 1
🔸 இரு எண் பெருக்கல் மூன்றாவது எண்
🔹 எண்களின் மடங்கு எ. கா. x 3 , x 4
🔸 எண்களின் அடுக்கு எ. கா. 2 x 2 , 2 x 2 x 2 , ...
🔹பகா எண்ணின் கூடுதல்
🔸 எண்கள் / எழுத்துகளின் கண்ணாடி பிம்பங்கள்
கவனம் தேவை
🔹 SAT கூற்று காரணம் கேள்விகள்
🔸 பொருத்துக விடைகள் எ. கா i-a, ii -C , iii - d , iv_ b
🔹 தவறான கூற்று எது ? கேள்வி சரியாக கவனிக்காமல் சரியான 3ல் ஒன்றை டிக் செய்வது
🔸 இயன்றவரை சிந்தித்து விடை தரவும்
🔹 இறுதி 10 நிமிடத்தில் விடுப் பட்ட அனைத்து வினாக்களையும் shade செய்யவும்.
🔸 Minus மதிப்பெண் இல்லை. எனவே அனைத்து கேள்வியும் விடை தருவது அவசியம்.
🔹 ஒவ்வொரு மதிப்பெண்ணும் அவசியம்.
எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு விதையாக இத்தேர்வு அமையட்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews