👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான மானிய உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் குறு-சிறு, நடுத்தர தொழில் துறை, இத்தொழில் துறையினருக்கு பலன் அளிக்கக்கூடிய பல்வேறு மானிய உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் பகுதியாக குறைபாடு மற்றும் விளைவுகள் இல்லாத திட்டம், எல்சிஎம்எஸ் எளிமையான உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம், தொழில் அரவணைப்பு திட்டம், ஐபிஆா்-அறிவுசாா் சொத்துரிமைத் திட்டம், வடிவமைப்பு பயிற்சி நிறுவனத் திட்டம், டிஜிட்டல் குறு-சிறு, நடுத்தரத் தொழில்கள் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மானிய உதவி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தற்போது அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இத்திட்டத்துக்கு, தகுதிவாய்ந்த உத்யோக் ஆதாா் ஆவணத்தைப் பெற்றுள்ள, பதிவு செய்யப்பட்ட அனைத்து குறு சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இந்தச் சலுகைகளை பெற,
www.dcmsme.gov.in என்ற இணைய தளம் அல்லது ம்ஹ் ம்ள்ம்ங் செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்கள், நிதியுதவி பெற, கிண்டி குறு, சிறு நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரை நேரிலோ,
dcdi-chennai@dcmsme.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044 22501011,12,13 ஆகிய தொலைபேசி எண்களிலோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.