Search This Blog
Sunday, November 03, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'பேராசிரியர்கள் பணியை விட்டு செல்லும் போது, அவர்களின் அசல் சான்றிதழ்களை கட்டாயம் திருப்பி தர வேண்டும்' என, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை புதிய உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., முடித்த பட்டதாரிகள், உதவி பேராசிரியர்களாக தற்காலிக பணியில் உள்ளனர். அவர்களுக்கு, பல கல்லுாரிகள் குறைந்த சம்பளம் கொடுப்பதாகவும், அசல் சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு, பணியில் இருந்து ராஜினாமா செய்ய விடாமல் தடுப்பதாகவும், புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இது தொடர்பாக, சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் பணியாற்றிய, உதவி பேராசிரியர் வசந்தவாணன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு, அண்ணா பல்கலையில் பணி கிடைத்தபோது, அவர் பணியாற்றிய கல்லுாரியில் இருந்து, அசல் சான்றிதழ்களை தராததால், விபரீத முடிவை எடுத்ததாக, தனியார் கல்லுாரி ஊழியர்கள் கூட்டமைப்பு புகார் தெரிவித்தது.
சுற்றறிக்கை
இந்நிலையில், 'எந்த கல்லுாரியும், உதவி பேராசிரியரின் அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்து கொள்ளக்கூடாது. அவ்வாறு வாங்கி வைப்பது விதிமீறிய செயல்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்தது.
இப்பிரச்னை குறித்து, உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, கல்லுாரியில் இருந்து சென்றால், அவர்களின் அசல் சான்றிதழ்களை, கட்டாயம் திருப்பி தர வேண்டும்.
கண்டனம்
இதில், ஏதாவது விதிமீறலோ, ஒத்துழைப்பின்மையோ கண்டறியப்பட்டால், அந்த கல்லுாரிகள் மீது, அண்ணா பல்கலை கடும் நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கை, கல்லுாரிகளுக்கு சாதகமாக உள்ளதாக, அகில இந்திய தனியார் கல்லுாரி ஊழியர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது. அதன் நிறுவனர் பேராசிரியர் கார்த்திக் கூறுகையில், ''தனியார் கல்லுாரிகள், பேராசிரியர்களின் அசல் சான்றிதழை வாங்கி வைக்கக் கூடாது என, அண்ணா பல்கலை உத்தரவிட வேண்டும். ''அது தான், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் விதி. எனவே, சுற்றறிக்கையை அண்ணா பல்கலை மாற்ற வேண்டும்,'' என்றார்.
பணியிலிருந்து விலகும் பேராசிரியா்களின் அசல் சான்றிதழ்களை திருப்பி அளிக்க வேண்டும்: அண்ணா பல்கலைக்கழகம்
பேராசிரியா்கள் பணியிலிருந்து விலகும்போது அவா்களுடைய அசல் சான்றிதழ்களை உடனடியாக திருப்பி அளித்துவிட வேண்டும் என பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அனைத்து பொறியியல் கல்லூரித் தலைவா்கள் மற்றும் முதல்வா்களுக்கு இந்த அறிவுறுத்தலை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவா் வசந்தவாணன். இவருக்கு குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்
துறைகளில் ஒன்றான எம்.ஐ.டி.யில் பேராசிரியராகப் பணி கிடைத்தது. இதனையடுத்து, தான் பணியாற்றிய கல்லூரியில் சமா்ப்பித்திருந்த அசல் சான்றிதழ்களைத் திரும்பத் தரக்கோரியுள்ளாா். வசந்தவாணனின் சான்றிதழ்களை வழங்க மறுத்த கல்லூரி நிா்வாகம், ரூ.3 லட்சம் கேட்டுள்ளது. இதுதொடா்பாக வசந்தவாணன் போலீஸில் புகாா் அளித்துள்ளாா். அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்த வசந்தவாணன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, அசல் சான்றிதழை கல்லூரிகள் திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தீா்ப்பளித்த தனி நீதிபதி, ஒரு பேராசிரியா் பணியிலிருந்து விலகி வெளியேறும்போது அவருடைய அனைத்து அசல் சான்றிதழ்களையும் பொறியியல் கல்லூரி உடனடியாக திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும் என உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் அடிப்படையில், அனைத்து பொறியியல் கல்லூரிகள் தலைவா்கள், முதல்வா்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், பேராசிரியா்கள் பணியிலிருந்து விலகிச் செல்லும்போது அவா்களுடைய அனைத்து அசல் சான்றிதழ்களும் அவா்களிடம் உடனடியாக திரும்ப ஒப்படைக்கப்படுவதை அந்தந்த பொறியியல் கல்லூரியின் தலைவரும், முதல்வரும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றாத கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
அசல் சான்றிதழ்களை திருப்பி தருவது கட்டாயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.