கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசனுக்கு கட்டாய விடுமுறை? : இந்து அமைப்புகள் குறித்த அறிக்கை எதிரொலியா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 02, 2019

Comments:0

கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசனுக்கு கட்டாய விடுமுறை? : இந்து அமைப்புகள் குறித்த அறிக்கை எதிரொலியா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி, கல்லுாரிகளில் இந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டு வருவதாக பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
பள்ளி, கல்லுாரிகளில் இந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், இதன் செயல்பாடுகளை கண்காணித்து, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி, கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசன், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பள்ளி, கல்லுாரிகளில், இந்து இளைஞர் முன்னணி, இந்து மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், இந்த அமைப்புகளை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த அறிக்கையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெங்கடேசன் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews