அதன் ஆய்வு முடிவுகள் பின்வருமாறு:
* 30 சதவீதத்துக்கும் அதிகமான சைபர் அச்சுறுத்தல்கள், கல்வித் துறைகளுக்கு வருகின்றன.
* உற்பத்தித்துறை, வங்கி, நிதித் துறை மற்றும் காப்பீட்டுத் துறை, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளிலும் ஹேக்கர்கள் அதிக அளவில் ஊடுருவுகின்றனர். * நாட்டில் உள்ள எந்த ஒரு துறையும் சைபர் தாக்குதலை எதிர்கொள்ளும் வலிமையோடு இல்லை.
* கடந்த காலாண்டுகளைக் காட்டிலும் இம்முறை சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
* இதைக் கருத்தில் கொண்டு இந்திய நிறுவனங்களும் அரசு அமைப்புகளும் பாதுகாப்பை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
* 'ஆன்ட்டிவைரஸ்' உள்ளிட்ட உரிய பாதுகாப்பு அம்சங்கள் ஆடம்பரமானவை அல்ல; அத்தியாவசியத் தேவை.
* சைபர் தாக்குதல்களில் ட்ரோஜான்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய நிறுவனங்கள் மீதான ஒட்டுமொத்த அச்சுறுத்தல்களில் 27% ட்ரோஜான்களின் பங்கு ஆகும்.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.