👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து பள்ளிக் குழந்தைகள் கடிதம் எழுதியுள்ளனா்.
சிகரெட், பீடி போன்றவற்றுக்கு மாற்றாக உலக அளவில் இ-சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடக்கத்தில் அதிக ஆபத்தில்லாதவை எனக் கூறப்பட்டாலும், பல்வேறு ஆய்வுகளின் முடிவில், புகையிலை சிகரெட்டுக்கு நிகரான தீங்குகள் இந்த இ-சிகரெட்டாலும் ஏற்படும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த இ-சிகரெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் நாடு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள மழலையா் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனா். அந்தக் கடிதத்தில், ‘இ-சிகரெட்டுக்கு தடை விதித்ததன் மூலம் பலா் புகைப்பழக்கத்தில் இருந்து மீள்வதற்கான வாய்ப்பாக உள்ளது. அதற்கு நன்றி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U