அறிவியல் உண்மை- மைதா எதிலிருந்து தயாரிக்கிறார்கள்? மைதா மாவினால் தயாரிக்கப்படும் உணவை சாப்பிடலாமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 20, 2019

அறிவியல் உண்மை- மைதா எதிலிருந்து தயாரிக்கிறார்கள்? மைதா மாவினால் தயாரிக்கப்படும் உணவை சாப்பிடலாமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மைதா தயாரிப்பு முறை: முதலில் கோதுமையை நன்றாக தீட்டுகிறார்கள். கோதுமையில் இருந்து தவிடும் நுண்ணுயிரிகளும் தீட்டுதலின் மூலம் நீக்கப்படுகின்றன. பின்னர் அதை மாவாக அரைக்கிறார்கள். அந்த மாவு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர் அந்த மாவில் பென்சாயில் பெராக்சைடு (BENZOYL PER OXIDE) எனும் வேதிப்பொருளை கலக்குகிறார்கள். இந்த வேதிப்பொருள் கோதுமை மாவில் உள்ள மஞ்சள் வண்ணத்தை நீக்கி தூய வெண்மையாக மாற்றுகிறது. இந்த வேதிப்பொருள் ஒரு நச்சாகும். தலைமுடியை கறுப்பாக மாற்றும் சாயத்தில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் இது. இது மைதாவில் உள்ள மாவுப்பொருளுடன் இணைந்து உருவாக்கும் நச்சுப்பொருள் சர்க்கரை வியாதிக்கு காரணியாகிறது. மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது கலக்கப்பட்டவுடன் மைதா வெகுமிருதுவாக மாறுகிறது.
சர்க்கரை வியாதிக்கு மருந்து தயாரிக்கும் ஆலைகளில் உள்ள சோதனைச்சாலைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் முதலில் வெள்ளெலி, சிறுபன்றி, குரங்கு ஆகிய விலங்கினங்களிடம் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. இந்த மிருகங்களுக்கு சர்க்கரை வியாதியை உண்டாக்க இந்த அல்லோக்சான் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த அல்லோக்சான் சேர்க்கப்படும் மைதாவை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகத்தானே செய்யும். இவை தவிர மைதாவில் செயற்கை வண்ணங்கள், தாது எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதனப்பொருட்கள், வெள்ளை சீனி, சாக்கரின், அஜினோமோட்டோ ஆகிய பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை மைதாவை மேலும் அபாயகரமானதாக மாற்றுகின்றன. இவை தவிர குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரேட் போன்றவைகளும் கலக்கப்படுகின்றன. கோதுமை தீட்டப்படும் போதே 76 விழுக்காடு வைட்டமின்களும், தாது பொருட்களும் அகற்றப்படுகின்றன. அத்துடன் 97விழுக்காடு நார்ச்சத்தும் களையப்படுகிறது. களையப்பட்ட சத்துகளை மீண்டும் சேர்க்க செயற்கையாக உருவாக்கப்படும் வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் கூட்டப்படுகின்றன. ஆனால் இவை இயற்கையாக கிடைப்பவற்றுக்கு இணையானவை அல்ல.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews