தண்ணீர் தேவையில்லை: புதிய கழிப்பறை மாடலை வெளியிட்ட "பில்கேட்ஸ்" - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 23, 2019

Comments:0

தண்ணீர் தேவையில்லை: புதிய கழிப்பறை மாடலை வெளியிட்ட "பில்கேட்ஸ்"

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் சீனாவில் புதிய கழிவறை மாடலை அறிமுகம் செய்தார். பில்கேட்ஸ், உலகம் முழுவதும் சுகாதாரமாக இருப்பது என்பது கட்டாயமான ஒன்று என அடிக்கடி கூறுவார். சமீபத்தில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனம், தூய்மை இந்தியா திட்டத்திற்காக குளோபல் கோல்கீப்பர் என்ற விருதை மோடிக்கு வழங்கியது.
இந்தியாவில் மேம்பட்ட சுகாதாரம் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவன அறிக்கையின் படி, இந்தியாவின் கிராமப்புறங்களில் மேம்பட்ட சுகாதார வசதிகள், குழந்தைகளின் இதய பிரச்சினைகள் சரிவு, பெண்களின் பி.எம்.ஐ உயர்வு ஆகியவை நிகழ்ந்துள்ளது தெரியவருகிறது.
விரைவில் சுகாதாரத்தில் முழு வெற்றி சுகாதார இலக்குகளை அடைவதில் இந்தியா விரைவில் முழுமையான வெற்றியை பெறவுள்ளது. ஃபிட் இந்தியா திட்டம் மூலம் உடல் ஆரோக்கியம், சுகாதார முன்னெச்சரிக்கை ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீனாவில் புதிய வகை கழிவறை இந்த நிலையில் பில்கேட்ஸ் சீனாவில் புதிய வகை கழிவறை மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியின் உரையில் பேசிய பில்கேட்ஸ், உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தேவையான பாதுகாப்பான சுகாதாரம் இல்லை என கூறினார். வீடியோ டுவீட் செய்த பில்கேட்ஸ் அதேபோல் பில் கேட்ஸ் வீடியோ ஒன்றை டுவிட் செய்திருந்தார். அதில், கழிவறை உட்பட அடிப்படை வசதிகள் கூட இல்லாத நாடுகள் மற்றும் பகுதிகளுக்கு அவர்களது அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருவதாக தெரிவித்திருந்தார்.
பீக்கருடன் மேடையேறிய பில்கேட்ஸ் அதே போல், பெய்ஜிங்கில் முக்கிய உரையை வழங்கும்போது அவருடன் கழிவறை குடுவையை வைத்திருந்தார். அதில் பேசிய பில்கேட்ஸ், இந்த பீக்கரில் என்ன இருக்கிறது என்று நீங்கள் யூகிக்கக்கூடும். நீங்கள் சொல்வது சரிதான். மனித மலம். இந்த சிறிய அளவிலான மலம் 200 டிரில்லியன் ரோட்டா வைரஸ் செல்கள், 20 பில்லியன் ஷிகெல்லா பாக்டீரியா மற்றும் 100,000 ஒட்டுண்ணி புழு முட்டைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கக்கூடும் என்று பேசினார். அதன்மூலம் இந்த கழிவறை வசதி கூட இல்லாமல் உலகின் பல்வேறு நாடுகள் உள்ளது என சுட்டிக்காட்டினார்.
50,000 குழந்தைகள் இறப்பதற்கு காரணம் மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட, சுமார் 500,000 குழந்தைகள் இறப்பதற்கு மோசமான சுகாதாரமே காரணம் என கூறினார். வெளிப்புறத்தை மனிதர்கள் கழிவறையாக பயன்படுத்துவால், மக்களின் வீடுகளைச் சுற்றியுள்ள நிலத்தடி நீர் மாசுபடும் என தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews