Search This Blog
Sunday, November 03, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இவர்கள் பள்ளிக்குச் செல்ல ஓடக்கரை மண் சாலை மட்டுமே உள்ளது. 2 கி.மீ தூரமுள்ள இந்த மண் சாலை சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் கற்சாலையாக மாற்றப்படவில்லை.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து ஒரு சிறிய சாலைக்காக செட்டிக்கட்டளைக் கிராம மக்கள் போராடுகிறார்கள். போராட்டம் வெற்றி பெறாததால் மழைக்காலத்தில் தினமும் முழங்கால் அளவு சேறும் சகதியுமாயுள்ள சாலையைக் கடந்து பள்ளிக்கூடம் செல்லவே அக்கிராமக் குழந்தைகள் அச்சப்படுகிறார்கள்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடலங்குடி ஊராட்சியில் செட்டிக்கட்டளை கிராமம் உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏழை விவசாயக் குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் ஓடக்கரை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளிக்குச் செல்ல ஓடக்கரை மண் சாலை மட்டுமே உள்ளது. 2 கி.மீ தூரமுள்ள இந்த மண் சாலை சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் கற்சாலையாக மாற்றப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் இக்கிராம மக்கள் அவசர மருத்துவ உதவியைக்கூட உடனடியாக பெற முடியாத நிலையில் உள்ளனர்.
இந்தக் கிராமத்திலிருந்து ஓடக்கரையிலுள்ள தொடக்கப் பள்ளிக்கூடம் செல்லும் சுமார் 20 மாணவர்கள், தினமும் சகதியில் செல்வதால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பெரும்பாலும் மழைக்காலத்தில் சுமார் இரண்டு மாத காலத்துக்கு பள்ளிக்கூடத்துக்கு `குட்பை' சொல்லி விடுகின்றனர். கல்வியும் தடைபடுகிறது. இதுகுறித்து அரசுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
`பள்ளிக்கூடம் செல்லவே பயமாயிருக்கு'- 70 ஆண்டுகளாக போராடியும் தீர்வு கிடைக்காமல் அல்லல்படும் கிராமம்!
இதுபற்றி கடலங்குடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மோகன்குமாரிடம் பேசினோம். `` என் பதவி காலத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மற்றும் தாய்த் திட்டம் ஆகியவற்றின் கீழ் ஓடக்கரை சாலையை தார்ச்சாலையாக மாற்றியமைக்க பஞ்சாயத்தில் தீர்மானம் போட்டு பரிந்துரைத்தோம். ஏனோ அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. அந்தச் சமயத்தில் தற்காலிகமாய் சுமார் 400 மீட்டர் தூரத்துக்கு செங்கல் ஜல்லி கொட்டி பாதையை சீர் செய்து தந்தேன். அந்தச் சாலைக்காக இன்றுவரை தொடர்ந்து போராடுகிறேன். கிராமப் பகுதியில் வசிக்கும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதே பெரும் போராட்டமாக உள்ள நிலையில், சரியான சாலையில்லாமல் சேற்றில் நடந்து இக்குழந்தைகள் படும் அவதி கண்கலங்க வைக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு இச்சாலையை போர்க்கால அடிப்படையில் தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும்" என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
`பள்ளிக்கூடம் செல்லவே பயமாயிருக்கு'- 70 ஆண்டுகளாக போராடியும் தீர்வு இல்லை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.