5,000 மின்வாரிய பணியிடங்களுக்கான உடல்தகுதி தேர்வு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 20, 2019

5,000 மின்வாரிய பணியிடங்களுக்கான உடல்தகுதி தேர்வு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கள பணிகளை மேற்கொள்ள, 'கேங்மேன்' என்ற பதவியில், 5,000 ஊழியர்களை தேர்வு செய்வதற்கான, உடல் தகுதி தேர்வு நடக்கும்இடம் மற்றும் தேதியை, மின் வாரியம்வெளியிட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப்பிரிவு பணிகளை மேற்கொள்ள, முதல் முறையாக, 'கேங்மேன்' என்ற பதவிக்கு, 5,000 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கு, ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், இன்ஜினியரிங், முதுகலை பட்டதாரிகள் என, 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு, வரும், 25ம் தேதி முதல் துவங்குகிறது. மாவட்ட வாரியாக, அந்த தேர்வு நடக்கும் இடங்களின் முகவரி, தேர்வு தேதிகளை, மின் வாரியம், தன் இணையதளத்தில், நேற்று வெளியிட்டு உள்ளது. இந்த விபரங்கள், விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும் அனுப்பப்பட்டு உள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews