பள்ளிகளுக்கு நவ.8ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 03, 2019

Comments:0

பள்ளிகளுக்கு நவ.8ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காற்று மாசு காரணமாக தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நவம்பர் 8ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமானதால் அங்கு பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நவம்பர் 5ம் தேதி வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை நவம்பர் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும், காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு வாகன கட்டுப்பாடும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஒற்றைப் படை, இரட்டைப் படை இலக்க எண்கள் அடிப்படையில் வாகனங்கள் இயக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. தில்லியில் தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மாசுவின் காரணமாகவும், ஹரியாணா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிா்க் கழிவுகளாலும் காற்று மாசு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் காற்று மாசு, மிக மோசமான நிலையைத் தொட்டு, நெருக்கடி நிலையை எட்டியுள்ளதால் பள்ளிகளுக்கு நவம்பர் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாநில முதல்வர் கேஜ்ரிவால், ''விவசாய நிலங்களில் காய்ந்த சருகுகளை எரித்ததன் மூலம் டெல்லி காற்று மாசு உச்ச நிலையை அடைந்துவிட்டது. இதனால் நவம்பர் 5-ம் தேதி வரை பள்ளிகளை மூட டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது'' என்று பதிவிட்டுள்ளார். முன்னதாககாற்று மாசு குறியீ்ட்டின் அளவு உச்சபட்சமாக நள்ளிரவு 12.30 மணி அளவில் 582 புள்ளிகளைத் தொட்டது. இந்த ஆண்டில் முதல்முறையாக இதுபோன்ற மோசமான, நெருக்கடியான நிலையை அடைந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும் 5-ம் தேதி வரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப்பணிகளில் ஈடுபட தடைவிதித்துள்ளது.
தொடர்ந்து 450 புள்ளிகளுக்கு மேல் காற்றின் மாசு 48 மணிநேரம் நீடித்தால், அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அரசு இருக்கிறது. அதாவது சரக்கு வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு, கட்டுமானப் பணிகள் நிறுத்தம், பள்ளிகளை மூட அறிவுறுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று காற்றின் மாசு அளவு உச்ச அளவை நெருங்கியதால், காலை நேரத்தில் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சிக்குச் செல்பவர்கள், உடற்பயிற்சி செல்பவர்கள் அதைப் புறக்கணித்தனர். குழந்தைகள் வேகமாகச் சுவாசிக்கும் தன்மை கொண்டவர்கள் என்பதால், குழந்தைகளின் உடல்நலன் குறித்துப் பெற்றோர் அனைவரும் கவலையடைந்தனர். இந்நிலையில் பள்ளிகள் மூடப்படுவது குறித்த அறிவிப்பு பெறோர்களுக்கு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews