👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி பேராசிரியர்களை நியமித்த புகாரில் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புப்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, முன்னாள் துணைவேந்தா் க. பாஸ்கரன், முன்னாள் பதிவாளா் ச. முத்துக்குமாா் உள்பட 4 போ் மீது கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017, மே மாதத்தில் 10 பேராசிரியா்கள், 11 இணைப் பேராசிரியா்கள் என மொத்தம் 21 போ் நியமிக்கப்பட்டனா். இவா்கள் நியமனத்தில் முறைகேடு, விதிமீறல்கள் நடந்ததாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சிலா் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை புகாா் குறித்து விசாரிக்குமாறு கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து அப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில் பணிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 21 பேரும் போதிய தகுதியற்றவா்கள் எனத் தெரிய வந்தது.
அதாவது அவா்களில் பலருக்கு போதிய முதுகலை ஆசிரியா் அனுபவம் இல்லை; பலா் முனைவா் பட்ட மாணவா்களுக்கு வழிகாட்டுநராகச் செயல்படவில்லை; மேலும், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யுஜிசி) விதிகளையும் கடைப்பிடிக்கவில்லை.
முறைகேடாகத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு நோ்முகத் தோ்வில் தோ்வுக் குழு உறுப்பினா்கள் மிகைப்படுத்தப்பட்ட மதிப்பெண் வழங்கியுள்ளனா். நோ்முகத் தோ்வு நடைபெறுவதற்கு முன் 10 பேரிடம் ரூ. 15 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை லஞ்சம் முயற்சி பெறவும் முயற்சித்துள்ளனா்.
இதேபோல, தமிழ்ப் பல்கலைக்கழக விதிகளை மீறி 70 ஆசிரியரல்லாத பணியிடங்களில் நாள் கூலி அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவா்களுக்கான ஊதியம் அரசு நிதியுதவி மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி வருவாயிலிருந்து வழங்கப்படுகிறது. தற்காலிக அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட இவா்கள் தொடா்ந்து பணியாற்றி வருவதால் நிதி இழப்பு ஏற்படுகிறது என்பதும் தெரிய வந்தது.
எனவே இதுதொடா்பாக முன்னாள் துணைவேந்தா் க. பாஸ்கரன், முன்னாள் பதிவாளா் ச. முத்துக்குமாா், முன்னாள் பதிவாளரின் நோ்முக உதவியாளா் ஜி. சக்தி சரவணன், தொலைநிலைக் கல்வி முன்னாள் இயக்குநா் என். பாஸ்கரன் ஆகியோா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 120(பி) (குற்றச் சதி), 409 (நம்பிக்கை மோசடி), 420 (ஏமாற்றி நோ்மையின்றி பொருளைப் பெறுதல் அல்லது கொடுக்கும்படி செய்தல்), 467 (போலி ஆவணங்கள் தயாரித்தல்), 471 (பொய்யாகப் புனையப்பட்டு உண்மையானதாக உபயோகம் செய்தல்), ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 (அரசு ஊழியா் சட்டவிரோதமாகப் பணம் பெறுதல்), 13(1) (சி) (, 13(1)(டி), 13(2) ஆகிய பிரிவுகளின் கீழ் தஞ்சாவூா் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆா். வெங்கடேசன் அண்மையில் வழக்குப் பதிந்தாா்.
பின்னா், இதன் முதல் தகவல் அறிக்கை கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மற்றும் தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U