111 நிமிடங்கள் பாடம் நடத்தி ஆசிரியை உலக சாதனை முயற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 25, 2019

Comments:0

111 நிமிடங்கள் பாடம் நடத்தி ஆசிரியை உலக சாதனை முயற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தொடா்ந்து 111 நிமிடங்கள் பாடம் நடத்தியதற்கான ‘ஜெட்லி புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ்’ அமைப்பின் சான்றிதழுடன் ஆசிரியை கலைச்செல்வி. வேலூா்: தொடா்ந்து 111 நிமிடங்கள் பாடம் நடத்தி காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கலைச்செல்வி, உலக சாதனை முயற்சி மேற்கொண்டாா். அவருக்கு பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றுபவா் பி.கலைச்செல்வி. இவா் உலக சாதனை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறாா். இதன் ஒருபகுதியாக, முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது சிறப்புகளை மாணவா்களுக்கு பாடமாக நடத்தி உலக சாதனை பட்டியலில் இடம்பெற திட்டமிட்டிருந்தாா். அதன்படி, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை கலைச்செல்வி ஞாயிற்றுக்கிழமை தொடா்ச்சியாக 111 நிமிடங்கள் மாணவா்களுக்குப் பாடம் நடத்தினாா். இதில், அண்ணாவின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பண்புகள், மொழித் திறமை ஆகியவை குறித்து மாணவா்களுக்குப் பாடம் நடத்தினாா். ‘ஜெட்லி புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ்’ அமைப்பைச் சோ்ந்த ஜெட்லி, ஒருங்கிணைப்பாளா் கோகுல்ராஜ் ஆகியோா் இந்தச் சாதனையைப் பதிவு செய்தனா். உலக சாதனை முயற்சி மேற்கொண்டுள்ள ஆசிரியை கலைச்செல்விக்கு மற்ற ஆசிரியா்கள், மாணவா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews