சிறப்பாசிரியர்கள் பணி இடங்களை நிரப்பக்கோரி தேர்வு வாரியத்தில்( TRB ) தேர்வர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أكتوبر 01، 2019

Comments:0

சிறப்பாசிரியர்கள் பணி இடங்களை நிரப்பக்கோரி தேர்வு வாரியத்தில்( TRB ) தேர்வர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் சிறப்பாசிரியர்களுக்கான (உடற்கல்வி,தையல், இசை,ஓவியம்) போட்டித்தேர்வு 23.09.2017 அன்று நடைபெற்றது. அதன்மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 13.08.2018 அன்று நடந்தது. தேர்வு எழுதி இரண்டு ஆண்டுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து ஓர் ஆண்டு முடிந்த நிலையில் இன்னும் எங்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணிநியமனம் நடைபெறவே இல்லை. எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை 250-300 கும் மேற்பட்டோர் அமைச்சர் அவர்களை சந்தித்து வலியுறுத்துவது TRB ல் ஒன்றுகூடி மனுகொடுப்பது என தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்தும் இதுவரை எங்களுக்கான கோரிக்கை நிறைவேரவே இல்லை.. இந்நிலையில் கடந்த வாரங்களில் இசை மற்றும் தையல் துறையினருக்கான திருத்திய இறுதி பட்டியல் மட்டும் வெளிவந்துள்ளது. ஆனால் அவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவில்லை.. ஆகவே உடற்கல்வி தேர்வுசெய்யப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உடற்கல்வி தேர்வர்கள் 30.09.2019 அன்று காலை 11.00pm மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கம் TRB வளாகத்தில் சுமார் 200-250 பேர் ஒன்றிணைந்து எங்களது (உடற்கல்வி) விரைவில் கலந்தாய்வு நடத்தி பணியானை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலுவாக வலியுறுத்த உள்ளோம்..
தேர்வு செய்யப்பட்டுள்ளோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலானோர் 40-45 வயதை கடந்தவர்கள்.. அதேபோல் இதை நம்பி தனியார் பள்ளி, கல்லூரிகளில் செய்துவந்த வேலையையும் இழந்து கடந்து இரண்டு ஆண்டுகளாகவே பெரும் ஏமாற்றத்துடன் காத்துகொண்டு இருக்கின்றோம்.
அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டும் இரண்டு ஆண்டுகளாக அந்தபணி கிடைக்காததால் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.. மேலும் இந்த காலிப்பணியிடங்கள் 2012 முதல் 2016 ஆண்டு வரை ஏற்பட்டது ஆகும்.. கடந்த 8 ஆண்டுகளாக எவ்வித உடற்கல்வி (சிறப்பாசிரியர்) காலிபணியிடமும் நிரப்பப்படாமல் இருப்பதால் அரசு பள்ளி மாணவ,மாணவிகளும் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது..
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة