விமானப் படையில் ஆசிரியர் பணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أكتوبر 02، 2019

Comments:0

விமானப் படையில் ஆசிரியர் பணி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய விமானப்படையின் ஆணையர் ஜோதிநிர்மலாசாமி வெளியிட்ட அறிக்கை: இளநிலை பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இளநிலை அறிவியல் பட்டப் படிப்பில் இயற்பியல், உளவியல், வேதியியல், கணக்கு, கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதியில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது, முதுநிலை ஆங்கிலம் அல்லது முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பில் கணக்கு, இயற்பியல், கணனி அறிவியல், புள்ளியியல், எம்சிஏ, ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதியில் 50 சதவீதம் மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப் படிப்புடன் பிஎட் பட்டம் கல்வித்தகுதி பெற்ற ஆண்கள் 19.1.1995 முதல் 1.7.2000 தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். முதுநிலை பட்டப் படிப்புடன் பிஎட் பட்டம் பெற்ற ஆண்கள் 19.7.1992 முதல் 1.7.2000 தேதிக்குள் பிறந்தவர்கள் தகுதியானவர்கள். CLICK HERE TO DOWNLOAD PDF
இது குறித்த மேலும் விவரங்கள் அனைத்தும் www.airmenselection.cdac.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். மேலும் co.8asc.tn.@gov.in என்ற மின்னஞ்சல், 044-22396565, 9444853551 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இந்திய விமானப் படை மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள கல்வி நெறியாளர்(Education Instructor Trade) என்ற பணியிடத்துக்கான நேர்காணல் மற்றும் இதர தேர்வுகளில் கலந்து கொள்ளவுள்ள அனைத்து நபர்களும் பயன்பெறும் வகையில் அக்டோபர் 3ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வழிப்புணர்வு முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று பயன் பெறலாம். CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة