بحث هذه المدونة الإلكترونية
الجمعة، أكتوبر 11، 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
TNPSC Group 2 Syllabus புதிய பாடத்திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் குறித்து டி.என்.பி.எஸ்.சி திடீர் ஆய்வுக்கூட்டம் நடத்தியுள்ளது.
TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு பாடத்திட்டங்கள் (TNPSC Group 2 Syllabus) அண்மையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று டி.என்.பி.எஸ்.சி திடீர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இங்கு காணலாம்.
Tamil Nadu Public Service Commission எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது. இதுவரையில் Prelims முதல்நிலை தேர்வில் தாள் 1, தாள் 2 என்று கேட்கப்பட்டு வந்தது. இவற்றில் தாள் 1 என்பது முழுக்க முழுக்க மொழிப்பாடம் ஆகும். அதாவது தமிழ் அல்லது ஆங்கிலம் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது.
புதிய பாடத்திட்டத்தின்படி, தாள் 1 மொழிப்பாடம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகத் திறனறிவுக் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. டி.என்.பி.எஸ்.சியின் இந்த பாடத்திட்ட மாற்றம் நடவடிக்கை, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காதது போல் உள்ளது என்று அரசியல் கட்சியினரும், தேர்வர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று (அக். 10) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வ இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC Group 2 Syllabus 2019
அதன்படி, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தான் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி உறுதியளித்துள்ளது. அதாவது தற்போது மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கேட்கப்பட்ட வந்த கேள்விகள் அனைத்தும் இனி முதல்நிலை்தேர்வு (Prelims) பொதுஅறிவு பகுதியில் கேட்கப்படும். இதே போல், (Mains) முதன்மைத்தேர்விலும் தமிழ் பாடத்தில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு – பொதுஅறிவுப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் பகுதிகள்:
தமிழ்ச் சமூகத்தின் வரலாறு, அகழ்வாராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகள், சங்ககாலம் தொட்டு தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியம், சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, 19 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் இயக்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி.
TNPSC Group 2 New Syllabus
முதன்மைத் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தமிழ் பகுதிகள்:
மெயின் தேர்வில் திருக்குறளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல், சமூக நீதி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் அடிப்படை கொள்கைகள், சமூக நல்லிணக்கம், தமிழகத்தின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் என தமிழ்நாடு சம்பந்தப்பட்ட பெரும்பாலான பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழர் நாகரீகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, சங்க கால இலக்கியம், தமிழகத்தின் இசைப் பாரம்பரியம், நாடகக் கலை, பகுத்தறிவு இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கங்கள், பெண்ணியம் மற்றும் தற்கால தமிழ் மொழி ஆகிய பாடங்களும் உள்ளது.
TNPSC Group 2 New Syllabus 2019 பற்றிய முழுமையான விபரங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
http://www.tnpsc.gov.in/Syllabus/CCSE_II_SYLLABUS_27092019.pdf?_ga=2.170368160.1838803457.1570432217-1456265853.1541369827
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
Syllabus
TNPSC/UPSC
Group 2 New Syllabus: குரூப் 2 புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் மாற்றம்? TNPSC திடீர் ஆலோசனைக் கூட்டம்!
Group 2 New Syllabus: குரூப் 2 புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் மாற்றம்? TNPSC திடீர் ஆலோசனைக் கூட்டம்!
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.