👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Jio new talk-time top-up plans IUC fees paise per minute : மூன்று வருடங்களுக்கு முன்பு ஜியோவை அறிமுகம் செய்யும் போது அனைத்தும் மூன்று மாதங்களுக்கு இலவசம் என்று தான் கூறியது. ஆனால் இந்த மாதம் 9ம் தேதி மாலை வெளியிட்ட அறிவிப்பின் படி, இதர நெட்வொர்க் வாடிக்கையாளர்களுடன் பேச ஒரு நிமிடத்திற்கு 6 பைசா என்று அறிவித்து செய்தி வெளியிட்டது. ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு பேசும் போது இண்டெர்கனெக்ட் யூசேஜ் சார்ஜ் என்ற கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு பதிலாக இது நாள் வரையில் 13 ஆயிரம் கோடியை ஜியோ கட்டியது.
இந்நிலையில் அதற்கு ஈடாக இந்த கட்டணத்தை அறிமுகம் செய்தது. தினமும் பேசுவதற்கு சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும் ட்ராய் அமைப்பு இந்த இண்டெர்கனெக்ட் சார்ஜினை முற்றிலுமாக வேண்டாம் என்று மறுத்தால் மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.
ஏர்டெல், வோடபோன், அல்லது பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் இயங்கும் எண்களுடன் பேசுவதற்காக சிறப்பு டாப்-அப் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். அதன்படி ரூ.10க்கு ரீசார்ஜ் செய்தால் 124 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம். ரூ. 20க்கு ரீசார்ஜ் செய்தால் 249 நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம். ரூ. 50க்கு ரீசார்ஜ் செய்தால் 656 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம். ரூ. 100க்கு ரீசார்ஜ் செய்தால் 1,362 நிமிடங்களுக்கு நீங்கள் பேசிக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் நீங்கள் செலுத்தும் கட்டணத்திற்கு இணையாக டேட்டாவை வழங்குகிறது ஜியோ. ரூ. 10க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி, ரூ. 20க்கு ரீசார்ஜ் செய்தால் 2ஜிபி, ரூ. 50க்கு ரீரார்ஜ் செய்தால் 5ஜிபி, ரூ. 100க்கு ரீசார்ஜ் செய்தால் 10ஜிபி டேட்டா இலவசம். போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாத பில்லுடன் இந்த கட்டணத்தையும் கட்டும் நிலை தான் உருவாகும். ரிலையன்ஸ் ஜியோ அந்த அறிவிப்பை வெளியிர ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் 'இலவசம் என்றால் இலவசம் தான். அன்லிமிட்டட் ப்ளான்களில் வேறு எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்க மாட்டோம்' என்று தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.