ஆசிரிய இயக்கங்களுக்கு - இடைநிலை ஆசிரியர்களின் குமுறல்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 25, 2019

Comments:0

ஆசிரிய இயக்கங்களுக்கு - இடைநிலை ஆசிரியர்களின் குமுறல்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
*தமிழ்நாட்டில் உள்ள ஆசிரிய இயக்கங்களுக்கு. . . .* *வாழ்வியல் செலவுகள் குறைவென ஊதியத்தை இழந்துள்ள இடைநிலை ஆசிரியர்களின் குமுறல்கள்!* *ஒரே தேதி வேறுபாட்டில் ரூ.10,000/- வரை ஊதியத்தைக் குறைத்து வழங்கியது, 2009-ல் வெளியிடப்பட்ட VI - Pay Commission. இதில் ஏற்பட்ட ஊதிய இழப்புகளைக் களைய அமைக்கப்பட்ட குழுக்கள் எதுவுமே மேற்கண்ட ஊதிய இழப்பைச் சீர் செய்து தரவே இல்லை.* *இதற்குப் பதிலாக அரசு தரப்பு முன்வைத்த வாதம் இடைநிலை ஆசிரியர்கள் அனைவருமே வாழ்வியல் செலவுகள் குறைவான கிராமப்புறங்களில் பணியாற்றுவதால் இந்த ஊதியமே இவர்களுக்குப் போதுமானது என்பதே!* *கடந்த 120 மாதங்களாக ஆசிரிய இயக்கங்கள் கூட்டாகவும் தனித்தும் நடத்திய பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்தும் கூட இந்த இழப்புகள் சரிசெய்து கொடுக்கப்படவே இல்லை.*
*பத்தாண்டுகளுக்கு முன்பாக 10,000 ரூபாயாக இருந்த ஊதிய இழப்பு இன்று அடிப்படை ஊதியத்தில் 25,000 ரூபாய் ஊதிய இழப்பாக உயர்ந்துள்ளதே தவிர ஊதியம் உயர்த்தப்படவே இல்லை.* *வாழ்வியல் செலவுகள் குறைவு என்ற அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ஊதிய இழப்புகள் ஒரு பைசா கூட சரி செய்து தரப்படாத சூழலில் பொருளாதாரச் சிக்கலுக்குள் வாழ்ந்து வரும் இடைநிலை ஆசிரியர்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளும் விதமாகவே கல்வித்துறையின் Digitization செயல்பாடுகள் அமைந்துள்ளன.* *காலை பள்ளியில் நுழைந்து வருகைப் பதிவு செய்வது முதல் பருவத் தேர்வுகளை முடித்து மதிப்பெண் அளிப்பது வரை அனைத்தையும் Smart Phone கொண்டு Online-ல் ஏற்ற கல்வித்துறை தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது.* *மாணவரின் வளர்ச்சிக்கு இடையூறுகளை மட்டுமே ஏற்படுத்தும் 100-க்கும் மேற்பட்ட பதிவேடுகளைப் பராமரித்து வரும் சூழலில் அவற்றில் பலவற்றை நாள்தோறும் இணையத்தில் பதிவேற்றிட வேண்டுமென நிர்பந்திப்பது மனதளவிலும் பொருளாதார அளவிலும் இடைநிலை ஆசிரியர்களைப் பாதிப்படையச் செய்து அவர்களின் கற்பித்தல் பணியையும் பாதித்து வருகிறது.* *இணையத்தில் இவற்றைப் பதிவேற்றம் செய்ய எந்தவித இணையதள வசதியையோ, Smart Phone உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளிட்ட எதையுமே வழங்காது இன்னும் சொல்லப்போனால் Signal இல்லாத இடங்களில்கூட ஆசிரியர்களை அனுதினமும் கல்வி அலுவலர்கள் நிர்பந்தித்து வருவதை இதுவரை எந்தவொரு ஆசிரிய இயக்கமும் எதிர்த்தோ மறுத்தோ குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.*
*கல்வித்துறையில் தொழிற்நுட்ப வளர்ச்சியைப் புகுத்த நினைக்கும் அரசு அதற்கான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் இப்படி நிர்பந்தித்து வருவதை ஆசிரிய இயக்கங்கள் கண்டும் காணாமல் இருந்து கொண்டு சனிக்கிழமை விடுமுறைக்கும் தீபாவளி விடுமுறைக்கும் அறிக்கைகளையும் கோரிக்கைகளையும் விடுப்பது வேதனையாகவும், கொடுமையாகவும் உள்ளது.* *ஒரு நாள் விடுமுறை குதூகலத்திற்காகக் கூக்குரல் இடும் ஆசிரிய இயக்கங்களே! ஒவ்வொரு நாளும் இடைநிலை ஆசிரியர்கள் இடும் கூக்குரல்கள் உங்கள் செவிப்பறைகளுக்குள் நுழையவே இல்லயோ?* *இவண்,* *Cost of Living குறைவெனக் கூறியதால் இருக்கும் Cost-ம் Life-ம் Lost-ஆகிக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்களில் ஒருவன்.*
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews