நீட் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் நீடித்த வளர்ச்சி எப்படி சாத்தியமாகும்?- ஐ.நா.,வில் கேள்வி எழுப்பிய மதுரை மாணவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 08, 2019

Comments:0

நீட் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் நீடித்த வளர்ச்சி எப்படி சாத்தியமாகும்?- ஐ.நா.,வில் கேள்வி எழுப்பிய மதுரை மாணவி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வு கல்வியில் ஏழை, பணக்காரர்கள் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. இத்தகைய ஏற்றத்தாழ்வு இருந்தால் எப்படி கல்வியில் நீடித்த வளர்ச்சி என்ற ஐ.நா.வின் இலக்கை எட்ட இயலும் என கேள்வி எழுப்பியுள்ளார் மதுரை மாணவி. மதுரை மாவட்டம் இளமனூர் அருகே உள்ள கார்சேரியைச் சேர்ந்தவர் மாணவி பிரேமலதா. பள்ளிக்கூடங்களில் மனித உரிமைகள் பாடம் கற்பிப்பதின் அவசியம் குறித்து ஐநா சபையில் பேசியுள்ளார். பிரேமலதா 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது 'ஏ பாத் டூ டிக்னிட்டி' (A Path to Dignity: The Power of Human Rights Education) என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. அதில் பிரேமலதா தன் கருத்துகளைக் கூறியிருந்தார். 7 ஆண்டுகள் கழித்து பிரேமலதாவுக்கு இந்த ஆவணப்படத்தின் அடிப்படையில் ஐநா சபையில் பேச வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, ஜெனீவாவில் அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் மாணவி பிரேமலதா பங்கேற்றுப் பேசினார். அங்கே பேசிய அவர், "இந்தியாவில் நிலவும் சாதிய முறையால் பாதிக்கப்பட்ட பெண் நான். நான் என்ன சாதியில் பிறக்க வேண்டும் என்று நான் தீர்மானிக்கவில்லை. ஆனால், என் பிறப்பு தொட்டே என் மீது சாதிய அடக்குமுறைகள் ஆரம்பித்துவிட்டன. அதுவும் குறிப்பாக கல்வி முறையில் சாதியத்தின் தாக்கத்தை நான் வெகுவாகவே உணர்ந்தேன். உயர் சாதி, தாழ்ந்த சாதி என்ற வெறுப்புணர்வு குழந்தைகள் மத்தியில் விதைக்கப்படுவதை நான் மனித உரிமைப் பாடங்களைப் படித்தபோதுதான் தெரிந்து கொண்டேன். இந்திய கல்வி முறை நீடித்த வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறது. நீட் தேர்வு முறை கல்வியில் பணக்காரர் - ஏழை வித்தியாசத்தை அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வால் முதன்முறையாக அனிதா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்டார். நீட் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் கல்வியில் நீடித்த வளர்ச்சி எப்படி சாத்தியமாகும்" என முழங்கினார். நீட் தேர்வு வேண்டாம் என ஐ.நா.வில் பேசிவிட்டு தமிழகம் திரும்பி இருக்கும், பட்டதாரி பெண்ணுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நீட் தேர்வு வேண்டாம் என ஐ.நா.வில் பேசிவிட்டு தமிழகம் திரும்பி இருக்கும், பட்டதாரி பெண்ணுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவரது எதிர்கால கனவும், லட்சியமும் குறித்து ஓர் பார்வை... மதுரை மாவட்டம் இளமனூர் அடுத்த கார்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரேமலதா, ஐ.நா.வில் பேசி திரும்பிய இளங்கலை பட்டதாரி. புதர் மண்டிய தரிசுக்காட்டில் நீண்டு கிடக்கும் ஒற்றை அடி பாதை வழி நடந்தால், தன்னந்தனியாக, ஊருக்கு வெளியே நிற்கும் அவரது வீட்டுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
இளமனூரில் உள்ள அரசு ஆதிதிராவிட பள்ளியில் படித்த பிரேமலதா, மனித உரிமை குறித்த ஆவணப் படம் ஒன்றில் பேசியிருக்கிறார். அதன் தாக்கம் ஐ.நா.-வில் பேசும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது. ஜெனீவா சென்ற பிரேமலதா, தமிழகத்தில் உள்ள கல்வி முறை, சாதிய ஒடுக்குமுறை, நீட் தேர்வு, அனிதாவின் மரணம் பற்றி பேசியுள்ளார். தான் படித்த மனித உரிமைக் கல்வியை, அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும், தமிழக அரசு பாடத்தில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தும் பிரேமலதா, சட்டம் படிப்பதே தமது லட்சியம் என்கிறார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews