Breaking

Monday, October 28, 2019

பள்ளிகளுக்கு நிதியுதவி பெற பழங்குடியினர் நல இயக்குனரகம் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் பள்ளிகளுக்கு, நிதியுதவி பெற, மாவட்ட கலெக்டர்களை அணுகும்படி, பழங்குடியினர் நல இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வாழும், பழங்குடியின மாணவ, மாணவியரின், கல்வி வளர்ச்சியை மேம்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது.அதற்காக, சேலம், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம், தர்மபுரி, திருச்சி, வேலுார், நீலகிரி, கோவை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் உட்பகுதிகளில், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் பள்ளிகளுக்கு, உதவிகள் செய்யப்படுகின்றன.அப்பள்ளிகளுக்கு, ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தின்படி, கல்வி மானியம், சீருடை, மடிக்கணினி, சைக்கிள், புத்தகப்பை, நோட்டுப் புத்தகம், காலணி போன்றவை வழங்கப்படுகின்றன. விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியருக்கு, உணவு மானியம், இதர செலவின மானியம் வழங்கப்படும்.எனவே, இப்பகுதிகளில், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் பள்ளிகள், நிதியுதவி பெற, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களை அணுகி, கருத்துரு சமர்பிக்க வேண்டும் என, பழங்குடியினர் நல இயக்குனரகம் தெரிவித்து உள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog