விஸ்வரூபம் எடுக்கும் மருத்துவ படிப்பு முறைகேடுகள் காப்பி அடித்த 41 பேரின் தேர்வு முடிவு செல்லாது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 20, 2019

Comments:0

விஸ்வரூபம் எடுக்கும் மருத்துவ படிப்பு முறைகேடுகள் காப்பி அடித்த 41 பேரின் தேர்வு முடிவு செல்லாது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2 தனியார் கல்லூரிகளில் காப்பி அடித்து தேர்வு எழுதிய 41 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என்று அறிவித்ததோடு, 2 கல்லூரிகளுக்கு தேர்வு மைய அங்கீகாரத்தை பறித்து டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 60க்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதுதொடர்பாக தேனி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகி கல்வித்துறை வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் சென்னையை சேர்ந்த 2 கல்லூரிகளில் மாணவர்கள் புத்தகத்தை வைத்து காப்பி அடித்தது சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக்கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளை சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்து பல்கலைக்கழகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது. திருள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள இரண்டு மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வில் முறைகேடு நடப்பதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு புகார்கள் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வு தொடர்பான சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க பல்கலைக்கழக நிர்வாகம் 2 கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டது. அதில் ஆகஸ்ட் 2, 3ம் தேதிகளில் நடந்த தேர்வின் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 25 பேர், 3ம் ஆண்டு படிக்கும் ஒரு மேலும் ஒரு ஆள்மாறாட்ட புகார் பிளஸ்2 தேர்வில் 900 மதிப்பெண் பெற்ற மாணவர் ஒருவர் நீட் தேர்வில் 400 மதிப்பெண் பெற்று சென்னை மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்துள்ளதாகவும், அந்த மாணவர் டெல்லியில் நீட் தேர்வு எழுதி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு புகார் வந்துள்ளது. புகார் மீது உரிய விசாரணை நடத்துமாறு சென்னை மருத்துவக்கல்லூரி நிர்வாகம், மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
'காப்பி' அடித்த சம்பவத்தை தொடர்ந்து இரு மருத்துவ கல்லுாரிகளில் தேர்வு நடத்த பல்கலை தடை விதித்துள்ளது.தமிழக மருத்துவ கல்லுாரிகளில் 'நீட்' நுழைவு தேர்வு வாயிலாக போலி மாணவர்கள் சேர்ந்த விவகாரம் விஸ்ரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள மாதா மருத்துவ கல்லுாரியில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் 41 மாணவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு எழுதினர்.அப்போது புத்தகங்களை பார்த்து மாணவர்கள் 'காப்பி' அடித்தது மருத்துவ பல்கலையின் தேர்வு ஒழுங்கு குழுவினரின் விசாரணையில் தெரிய வந்தது. அதேபோல மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு தேர்வறை கண்காணிப்பாளர்கள் முறைகேடாக உதவியதும் தெரிய வந்தது.இந்த விவகாரத்தில் மாதா மருத்துவ கல்லுாரியை சேர்ந்த 41 மாணவர்கள் எழுதிய தேர்வு செல்லாது என பல்கலை அறிவித்துள்ளது. மேலும் மாதா மருத்துவ கல்லுாரி வளாகத்தில் தேர்வு நடத்த மூன்றாண்டும் ஆதிபராசக்தி மருத்துவ கல்லுாரி வளாகத்தில் தேர்வு நடத்த இரண்டாண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews