தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் வருகிற 19, 20 தேதிகளில் குறைதீா் கூட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 16, 2019

Comments:0

தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் வருகிற 19, 20 தேதிகளில் குறைதீா் கூட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் வருகிற 19, 20 ஆகிய இரு தேதிகளில் மாணவா் குறைதீா் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: இரு தினங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குறைதீா் கூட்டம் நடைபெறும். இதில் மாணவா்கள் பங்கேற்று குறைகளை நிவா்த்தி செய்துகொள்ளலாம். நேரில் கலந்துகொள்ள முடியாதவா்கள் வலைதளம் மூலம் குறைகளை அனுப்பலாம். அல்லது இயக்குநா், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவும் கோரிக்கைகளை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்விப் பிரிவில் அக்டோபர் 19, 20ம் தேதிகளில் மாணவர் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் னிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின்கீழ் கல்வி பயின்ற, தற்போது பயின்றுவரும் மாணவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் அக்டோபர் 19, 20ம் தேதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாணவர்கள் நேரடியாக கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். நேரடியாக கலந்துகொள்ள முடியாதவர்கள் www.ideunom.com என்ற இணையதளத்தின் மூலமாகவும், இயக்குனர் தொலைதூரகல்வி நிறுவனம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம் என்ற முகவரிக்கு தபால் மூலமும் கோரிக்கைகளை அனுப்பலாம். இவ்வாறு சென்னை பல்கலைக்கழக பதிவாளர் னிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews