தொழிலாளர் குழந்தைகள் கல்வி உதவி பெறலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 03, 2019

Comments:0

தொழிலாளர் குழந்தைகள் கல்வி உதவி பெறலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொழிலாளர் நல நிதி செலுத்துவோரின் குழந்தைகள், கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, தமிழக தொழிலாளர் நல வாரிய செயலர் தெரிவித்துள்ளார். இது குறித்து, வாரிய செயலர் வெளியிட்டுள்ள அறிக்கை:தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகை, கல்வி ஊக்கத் தொகை, பாடநுால் உதவித் தொகை ஆகிய, பல்வேறு உதவி திட்டங்கள், தொழிலாளர் நலத்துறையால் அமல்படுத்தப்படுகின்றன. மாதம், 25 ஆயிரம் ரூபாய்க்குள் ஊதியம் பெறுவோரின் குழந்தைகள் உதவி பெறலாம். இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, விவசாயம், உடற்பயிற்சி ஆகிய, பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு படிப்போருக்கு, 5,500 ரூபாய் முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப் படும். மேல்நிலை கல்வி, தொழிற்கல்விக்கு, 4,000 ரூபாய் உதவி வழங்கப்படுகிறது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், பொதுத் தேர்வில், முதல், 10 இடங்களைப் பெறுவோருக்கு, 10ம் வகுப்பிற்கு, 2,000 ரூபாய்; பிளஸ் 2வுக்கு, 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை, தொழிலாளர்கள், தங்கள் நிறுவனத்தின் வழியாக, டிசம்பருக்குள், 'செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், அஞ்சல் பெட்டி எண்: 718, தேனாம்பேட்டை, சென்னை -- 6' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தொழிலாளர் நல நிதி செலுத்துவோரின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக தொழிலாளர் நல வாரிய செயலர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வாரிய செயலர் வெளியிட்டுள்ள அறிக்கை:தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, கல்வி ஊக்கத் தொகை, பாடநுால் உதவித் தொகை ஆகிய பல்வேறு உதவி திட்டங்கள் தொழிலாளர் நலத்துறையால் அமல்படுத்தப்படுகிறது. மாதம் 25 ஆயிரம் ரூபாய்க்குள் ஊதியம் பெறுவோரின் குழந்தைகள் உதவி பெறலாம்.இன்ஜியனியரிங் மருத்துவம் சட்டம் ஆசிரியர் பயிற்சி விவசாயம் உடற்பயிற்சி ஆகிய பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு வரை 5,500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். மேல்நிலைக் கல்வி தொழிற்கல்விக்கு 4,000 ரூபாய் உதவி வழங்கப் படுகிறது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் பொதுத் தேர்வில் முதல் 10 இடங்களைப் பெறுவோருக்கு 10ம் வகுப்பிற்கு 2,000 ரூபாய்; பிளஸ் 2வுக்கு 3,000 ரூபாய் வழங்கப் படுகிறது.இதற்கான விண்ணப்பங்களை தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தின் வழியாக டிசம்பருக்குள் 'செயலர் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அஞ்சல் பெட்டி எண்: 718 தேனாம்பேட்டை சென்னை -- 6' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலவாரியத்துக்கு நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள தொழிற் சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் ஆகியவற் றில் பணிபுரிகின்ற, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத் தும் தொழிலாளர்களின் பிள்ளை களுக்கு கல்விஉதவித்தொகை, கல்வி ஊக்கத் தொகை மற்றும் பாடநூல் உதவித் தொகை ஆகிய திட்டங்கள் அமல்படுத்தப் படுகின்றன. அடிப்படை ஊதியம், அகவிலைப்படி சேர்த்து ரூ.25 ஆயிரம் வரை ஊதியமாக பெறும் தொழிலாளர்கள் இத்திட்டங் களுக்காக விண்ணப்பிக்கலாம்.கல்வி உதவி தொகையாக ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும் பொறியியல், மருத்துவம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, விவசாயம், உடற்பயிற்சி ஆகிய படிப்பு களுக்கு பட்டயப் படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு வரை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் மேல்நிலை கல்வி மற்றும் தொழிற் பயிற்சி கல்விக்கு ரூ.4 ஆயிர மும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட் டில் ஒவ்வொரு கல்வி மாவட் டங்களிலும் அரசு பொதுத்தேர்வில் முதல் 10 இடங்கள் பெறும் தொழிலாளர்களின் பிள்ளை களுக்கு 10-ம் வகுப்புக்கு ரூ.2 ஆயிரமும் 12-ம் வகுப்புக்கு ரூ.3 ஆயிரமும் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. புத்தகம் வாங்க உதவித் தொகை யாக மேல்நிலைக் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை ரூ.1000 முதல் ரூ.3 ஆயிரம்வரை வழங்கப் படுகிறது. இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை தாங்கள் பணி புரியும் நிறுவனத்தின் மூலம் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் செயலா ளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், அஞ்சல் பெட்டி எண்.78, தேனாம்பேட்டை சென்னை-6, என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews