சலுகை - என்ன சலுகை
தீபாவளிக்கு முதல் பரிசே ஜியோ போன் தான் என்கிறது ஜியோ, இரண்டாவது சலுகை இலவச டேட்டா, இது தவிர மூன்றாவதாக புதிய ரீசார்ஜ் பிளான்கள். இந்த விழாக்கால பண்டிகை சீசனில் ஜியோ தனது ஜியோபோனினை மிக தள்ளுபடி விலையில் கொடுத்து வருகிறது. குறிப்பாக 1,500 ரூபாய் கொடுக்க வேண்டிய போனை, வெறும் 699 ரூபாய்க்கு கொடுத்து வருகிறது. இது சுமார் 50 சதவிகிதத்துக்கும் மேல் தள்ளுபடியாகும்.
இலக்கு - ஜியோவின் இலக்கு
முன்னதாக 2ஜி வாடிக்கையாளர்களை கவர இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இது தற்போது 2ஜி போன்களை உபயோகிப்பவர்களை 4ஜிக்கு மாற்றுவது தான் இதன் இலக்கு என்றும் ஜியோ கூறியுள்ளது. மேலும் இந்த புதிய ஜியோ போன்களை வாங்கி உபயோகிக்கும் போது, குறைந்த பட்சம் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 700 ரூபாய் மதிப்பிலான டேட்டா இலவசமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் உங்களின் முதல் ஏழு ரீசார்களுக்கு ஜியோ 99 ரூபாய் மதிப்புள்ள இலவச டேட்டா சேவைகளை வழங்கும் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது.
ஐயூசி- ஐயூசி டாப்-அப்
ஜியோ போனை பயன்படுத்துபவர்கள் தவிர, மற்றவர்கள் ஐயூசி டாப் அப்களை 10 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வாங்கி கொள்ளலாம் என்றும், இதன் மூலம் புதிய வரம்பற்ற சேவைகளை பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. இதில் 10 ரூபாய்க்கான வவுச்சரின் மூலம் நீங்கள் ஜியோவிலிருந்து மற்ற வாடிக்கையாளர்களுக்கு 124 நிமிடம் வாய்ஸ் காலை பெற முடியும் என்றும், இதற்கு 1 ஜிபி டேட்ட இலவசமாக கிடைக்கும் என்றும், இதே 100 ரூபாய்க்கு ஐயூசி டாப் அப் செய்தால் 1,632 நிமிடங்கள் வாய்ஸ் காலையும், 10 ஜிபி டேட்டாவையும் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.
எல்லாமே ஒன்று - எல்லாமே ஒரே டாப் அப்பில்
இந்த புதிய டாப் அப் திட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி 222 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் ஒருவருக்கு 56 ஜிபி டேட்டாவும், இது 28 நாட்களுக்கு வேலிடிட்டியும், இதே இரண்டு மாதங்களுக்கு 333 ரூபாய்க்கும், இதில் 112 ஜிபி டேட்டாவும், இதே 3 மாததுக்கு 444 ரூபாய் ரீசார்ஜும் செய்து கொண்டால் 168 ஜிபி டேட்டாவும், இதில் ஜியோ - ஜியோ கால்கள் இலவசம் என்றும், மற்ற அழைப்புகளுக்கு முதல் 1000 நிமிடங்கள் இலவசம் என்றும், இந்த இலவச கால்களுக்கு பின்பு கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.