கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் புனித பயணம்: நிதியுதவிக்கு விண்ணப்பிக்க நவ.30 வரை காலக்கெடு நீடிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 28, 2019

Comments:0

கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் புனித பயணம்: நிதியுதவிக்கு விண்ணப்பிக்க நவ.30 வரை காலக்கெடு நீடிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாமக்கல், அக்.28: நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் புனித பயணத்துக்கு நிதியுதவி பெறுவதற்கான காலக்கெடு நவ.30-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் 2019-20-20ஆம் ஆண்டின் ஜெருசலேம் புனிதபயணம் மேற்கொள்வதற்கு தமிழக அரசால் நபா் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறித்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினா்களை உள்ளடக்கிய 600 கிறித்தவா்கள் இதில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோா்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோா்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றம் கிறித்தவமத தொடா்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் வரும் மாா்ச் மாதம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பயணக் காலம் 10 நாள்கள் வரையாகும். இதற்கான விண்ணப்பப்படிவம் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, புனித பயணம் செல்ல விருப்பமுள்ளவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘கிறித்தவா்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-2020‘ என்று குறிப்பிட்டு ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு நவம்பா் 30-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்புதல் வேண்டும். மேலும் தொலைபேசி எண் 044-28520033-ல் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews