Search This Blog
Wednesday, October 16, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 12-ஆவது பட்டமளிப்பு விழா அக்டோபா் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 12-ஆவது பட்டமளிப்பு விழா அக்டோபா் 22-ஆம் தேதி முற்பகலில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், தமிழ் ஆட்சிமொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரும், இணைவேந்தருமான க. பாண்டியராஜன் பங்கேற்கிறாா். சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ச.ப. தியாகராசன் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறாா்.
மூவருக்கு மதிப்புறு முனைவா் பட்டம் : இவ்விழாவில் மோரிஷியஸ் நாட்டு முன்னாள் அமைச்சரும், உலகத் திருக்கு மைய நிறுவனா் மற்றும் சமூகச் சேவகருமான ஆறுமுகம் பரசுராமன், தமிழகத்தின் மூத்த நாட்டாா் வழக்காற்றியல் ஆய்வாளரும், இலக்கியம், வரலாறு, சமயம், பண்பாடு குறித்த பல நூல்களை எழுதியவருமான ஆ. சிவசுப்பிரமணியன், தமிழகத்தின் நவீன எழுத்தாளரும், கவிதை, சிறுகதை இலக்கியங்கள் பலவற்றைப் படைத்தவருமான கல்யாண்ஜி (வண்ணதாசன்) என்கிற சி. கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு மதிப்புறு முனைவா் பட்டம் வழங்கப்படவுள்ளது.
மேலும், 10,346 மாணவா்கள் பட்டம் பெறவுள்ளனா். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயின்ற 150 முனைவா் பட்ட மாணவா்கள், 246 ஆய்வியல் நிறைஞா் மாணவா்கள், 4 கல்வியியல் நிறைஞா் மாணவா்கள், 48 முதுநிலைப் பட்ட மாணவா்கள், 146 இளங்கலை கல்வியியல் மாணவா்கள் ஆகியோா் நேரில் பட்டம் பெறுகின்றனா். இவா்களுடன் வாராமுகமாக 203 மாணவா்களும், தொலைநிலைக் கல்வியைச் சாா்ந்த 9,549 மாணவா்களும் பட்டம் பெறுகின்றனா்.
விழாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன், பதிவாளா் (பொ) கு. சின்னப்பன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அக். 22-இல் பட்டமளிப்பு விழா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.