2021முதல் இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 22, 2019

Comments:0

2021முதல் இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு இனி அரசு வேலை கிடையாது என்றும், இந்த அதிரடியான திட்டமானது ஜனவரி 1, 2021முதல் அமலுக்கு வர உள்ளது என்றும் அசாம் அரசு தெரிவித்துள்ளது. 126 உறுப்பினர்களை கொண்ட அசாம் சட்டமன்றம் மக்கள் தொகைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அசாம் அமைச்சரவை மற்றொரு புதிய கொள்கையையும் ஏற்றுக் கொண்டது என்றும், இந்த புதிய கொள்கையின் படி, நிலமற்ற பழங்குடி மக்கள் விவசாயத்திற்கு 43,200 சதுர அடி நிலமும், வீடு கட்டுவதற்கு அரை பிக்ஹாவிற்கும் தகுதியுடையவராக இது புதிய கொள்கை மாற்றும் என்றும், இதன் படி ஒரு பயனாளி 15 வருட பயன்பாட்டிற்கு பிறகு தான் நிலத்தை விற்க முடியும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சிறிய குடும்பங்களைக் ஊக்குவிக்க கோரி, அம்மாநில சட்டமன்றம், கடந்த செப்டம்பர் 2017ல் அசாமின் மக்கள் தொகை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற கொள்கையை நிறைவேற்றியது. இது தவிர இரண்டு குழந்தைகளைக் கொண்டவர்களை மட்டும் அரசாங்க வேலைக்கு தகுதியுடையவர்கள் என்றும், தற்போதுள்ள அரசு ஊழியர்களும் கண்டிப்பாக இரண்டு குழந்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ஃபோசிஸ் முறைகேடு குறித்து இன்ஃபோசிஸ் தலைவர் சொல்வது என்ன..? மேலும் மக்கள் தொகை தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும், அதே சமயம் அசாமின் நிலம் மற்றும் மற்ற வளங்கள் மீதும் அழுத்தம் கொடுக்கப்பட்டது என்றும், இதனால் நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவது எங்களின் கடமைகளில் முக்கியமான கடைமைகளில் ஒன்று எனவும், இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு இதை ஒரு அமைச்சர் கூறினார் என்றும் கூறப்படுகிறது. இது தவிர இந்த அமைச்சரவை கூட்டத்தில், பஸ் கட்டணங்களை 25% அதிகரிப்பது என்றும், விதவைகளுக்கு மாதம் 300 ரூபாய் வழங்கும் திட்டம், மேலும் ஏப்ரல் 1 அல்லது அதற்கு மேல் விதவைகளாக மாறிய பெண்களுக்கு ஒரு முறை 25,000 ரூபாய் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படியோ இதன் மூலம் மக்களுக்கு நல்லது நடந்தால் சரி தானே.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews