மைக்ரோசாப்ட் கல்வி மேளா-2019 - தமிழக ஆசிரியர்களுக்கு அழைப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، أكتوبر 25، 2019

Comments:0

மைக்ரோசாப்ட் கல்வி மேளா-2019 - தமிழக ஆசிரியர்களுக்கு அழைப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆண்டுதோறும் மைக்ரோசாப்ட் நிறுவனம் பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்பெறும் இணையவழியிலான பாடப் பயிற்சியில் தேர்ச்சி பெற்று பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் புள்ளிகள் ஆகியவற்றை தேர்வர்களுக்கு வழங்கி வருகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்க மைக்ரோசாப்ட் கல்விப் புத்தாக்கக் கல்விப் பயிற்றுநர் (Microsoft Innovative Education's Educator) சான்று பெற்றவர்களின் கல்வி மற்றும் பயிற்சி சார்ந்த அனுபவங்களை நேரிடையாக ஏனையோருக்குக் கிடைக்கச் செய்யும் பொருட்டு தேசிய அளவில் புதுடெல்லியில் காரகோன் பகுதியில் நாடு முழுவதிலும் தேர்வு செய்யப்பட்டவர்களைத் தம் சொந்த செலவில் விமானப் பயணம் மேற்கொள்ள செய்தும் சொகுசு விடுதியில் தங்க வைத்தும் 'புதுமைக் கற்றலில் மைக்ரோசாப்ட்டின் பங்கு' என்னும் தலைப்பில் எதிர்வரும் நவம்பர் 19, 20 ஆகிய இரண்டு நாள்கள் கல்வி நாள் (Edu Days) கொண்டாடி மகிழவிருக்கிறது.
தேசிய அளவில் நடக்கும் இந்தக் கல்விக் கருத்தரங்கில் கற்றல் மற்றும் கற்பித்தலில் பல்வேறு புதுமைகள் படைத்து வரும் சற்றேறக்குறைய 116 ஆசிரியர் பெருமக்களிடமிருந்து உலக அளவிலான பல்வேறு கற்றல் செயல்திட்ட ஆய்வுகள் குழுவாகப் பலவகையான தலைப்புகளில் பெறப்பட உள்ளன. இதற்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட எட்டு ஆசிரியர்கள் விவரம் பின்வருமாறு:
1) முனைவர் மணி கணேசன் பட்டதாரி ஆசிரியர் மேலகண்டமங்கலம் திருவாரூர் மாவட்டம்.
2) முனைவர் ப.இரமேஷ் இடைநிலை ஆசிரியர் கருநிலம் காஞ்சிபுரம் மாவட்டம்.
3) தேசிய விருதாளர் S.திலீப் பட்டதாரி ஆசிரியர் விழுப்புரம் மாவட்டம்.
4) தேசிய விருதாளர் P.கருணைதாஸ் பட்டதாரி ஆசிரியர் நாரணபுரம் விருதுநகர் மாவட்டம்.
5) மாநில விருதாளர் சு.மனோகர் பட்டதாரி ஆசிரியர் வெள்ளியணை கரூர் மாவட்டம்.
6) கனவு ஆசிரியர் ஆசிரியர்.நெட் K.சரவணன் வேலூர் மாவட்டம்.
7) ஆசிரியர் பயிற்றுநர் கி.ஐயப்பன் காடையாம்பட்டி.
8) கனவு ஆசிரியர் வேடப்பட்டி இரா.இளவரசன்
தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் பெருமக்களுக்குப் பல்வேறு தரப்பினரும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நாமும் வாழ்த்துவோம்!
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة