ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019-20 மானியத் தொகை - செலவீனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 14, 2019

Comments:0

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019-20 மானியத் தொகை - செலவீனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2019 - 20ம் நிதியாண்டு - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி மானியத் தொகை ( School Grant ) - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு* ➖➖➖➖➖➖➖➖➖➖➖ *பள்ளி மானியத்தினைக் கீழ்க்காணும் இனங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.* *1⃣.பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10 % தொகை SWACHHTA ACTION PLAN 2019-20 (SAP) முழு சுகாதாரத் தமிழகம் என்ற இனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.* *மேற்படி 10 % தொகையினை முழு சுகாதார செயல் திட்டத்திற்கு (Swachhta Action Plan) கீழ்க் குறிப்பிட்டுள்ள இனங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.* *✅பள்ளி வகுப்பறை,* *✅வளாகத் தூய்மை,* *✅கழிப்பறையைச் சுத்தமாக,சுகாதாரமாக பராமரித்தல்,* *✅கை கழுவ வசதி (Hand washing facility) பயன்படுத்துதல்,* *✅தூய்மையான குடிநீர்* *போன்ற செயல்பாடுகளுக்கு மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.* *2⃣.பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள* *🌸கற்றல் உபகரணங்களை மாற்றவும்,* *🌸பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான* *🌷நாளிதழ்கள்,* *🌷மின்கட்டணம்,* *🌷இணையதள வசதி,* *🌷ஆய்வக உபகரணம்,* *🌷குடிநீர்,* *🌷கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்,* *போன்றவற்றிற்கு இந்த நிதியை பயன்படுத்த வேண்டும்.*
*3⃣. அரசு பள்ளிக் கட்டிடங்களின் கட்டமைப்பு வசதிகளை (கழிவறை, குடிநீர்...)* *சமுதாய பங்களிப்புடன் பராமரிக்கவும்,* *பழுதுபார்க்கவும் மற்றும் துாய்மை இந்தியா திட்டத்தினை ஊக்குவித்திட இந்த நிதியை பயன்படுத்தவேண்டும்.* *4⃣.தலைமையாசிரியர் இத்தொகையினை பயன்படுத்தும் முன் பள்ளி மேலாண்மை குழுவினர்களுடனும்,* *ஆசிரியர்களுடனும் கலந்து ஆலோசித்து இந்த ஆண்டு எந்தெந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்து அதனை தீர்மானமாக பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானம் பதிவேட்டில் முறையாக பதிவு செய்த பின்பு* *15. 03. 2020 - க்குள் செலவுகள் மேற்கொள்ள வேண்டும்.* *5⃣.பள்ளி மானிய செலவினங்கள் (School Grant) பள்ளிகள் தேவையை உணர்ந்து அத்தியாவசியமான தரமான பொருட்களை கொள்முதல் செய்வதற்கான விதிகளை பின்பற்றி வாங்க வேண்டும்.* *6⃣.மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளிகளுக்கு பார்வைக்குச் செல்லும் போது பள்ளி மானியம் முறையாக செலவிடபட்டுள்ளதா என்பதை உறுதி செய்திடல் வேண்டும்.* *7⃣.Financial Management Mannual 7. 14 (I&II) level of procurement - ன் படி பள்ளி மானியம் பள்ளி அளவிலேயே செலவிடப்பட வேண்டும்.* *கொள்முதல் விதிகளை பின்பற்றி,* *🌹தரம்,* *🌹விலை,* *🌹பயன்பாடு* *ஆகியவற்றை கவனத்தில் கொண்டு SMC அளவிலேயே கொள்முதல் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.* *கொள்முதல் விதிகள் மேற்கொண்ட பின்னர்* *✅பொருட்களின் தரம்* *மற்றும்* *✅நம்பகத் தன்மை* *General Financial Rules ( GFR )* *145 , 146 படி உரிய சான்றிதழில் தலைமை ஆசிரியர் / கொள்முதல் குழுவினர் கையொப்பமிட்டு Procurement file - ல் இணைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*
*8⃣.மேற்கொள்ளப்பட்ட அனைத்து செலவினங்களுக்கு* *✅தீர்மான நகல்* *✅தேவைப்பட்டியல்* *✅விலைப்புள்ளி & ஒப்புநோக்கு பட்டியல் பற்றுச்சீட்டு* *✅GFR 145 / 146 சான்றிதழ் பதிவேடு* *ஆகியவற்றை முறையாக பாராமரித்து துறைத் தணிக்கையாளர் மற்றும் ஆய்வின் போது தலைமையாசிரியர் முன்னிலைப்படுத்க வேண்டும்.* *9⃣.மேலும் செலவினங்கள் மேற்கொண்டமைக்கான பயன்பாட்டுச் சான்றிதழை மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி அனைத்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் / தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.* *1⃣0⃣.உதவித் திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கணக்கர் பள்ளி மானியத் தொகை (School Grant) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும். பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் (Utilization Certificate) பெற்று, மாவட்ட அளவில் தொகுத்து மாவட்டத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழை மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு 10. 04. 2020 க்குள் அனுப்பி வைத்தல் வேண்டும்.* *1⃣1⃣.பள்ளி மானியத் தொகையினை இச்சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள செயல்பாடுகளை தவிர வேறு எந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தலாகாது என தெரிவிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் இத்தொகையினை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.* *1⃣2⃣.பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இப்பொருள் குறித்து உரிய விவரங்களை தெரிவித்து ஒப்புதல் பெறப்பட வேண்டும்.* *மாநில திட்ட இயக்குநர்*
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews