"விநாயகர் சதுர்த்தி மந்திரம்" தெரிந்து கொள்ளுங்கள்..!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، سبتمبر 17، 2023

"விநாயகர் சதுர்த்தி மந்திரம்" தெரிந்து கொள்ளுங்கள்..!!



விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அனைவரும் விநாயகர் மந்திரத்தை தெரிந்து கொண்டு விநாயகர் அருள் பெறுங்கள்.

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் பிள்ளையார் மந்திரம் சொல்லி வழிபடலாம்.இவை எல்லாம் தெரியாது என்றால் பரவாயில்லை. ஓம் கம் கணபதயே நமஹ என்று 108 முறை சொல்லி மனதார வேண்டிக்கொண்டு தூப தீப ஆராதனை காட்டி , நிவேதனம் செய்யும் விதமாக முதலில் இலையை சிறிது நீரை விட்டு மங்கல தீபாராதனை காட்ட வேண்டும்.அன்றைய தினம் இல்லாதோர் , இயலாதோருக்கு அன்னதானம் வஸ்திரதானம் செய்வது ரொம்பவே விசேஷமானது. புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி வரை நம் இல்லத்தில் பூஜை அறையில் பிள்ளையார் இருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய பண்டைய முறை. இந்த முப்பது நாட்கள் தினந்தோறும் மனதோடு வழிபடவேண்டும்.

புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் புனர் பூஜை முடித்து விநாயகர் சிலையை நதியில் , குளத்திலோ , கடலிலோ அல்லது ஏதாவது ஒரு நீர்நிலையில் விட வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அடுத்த நாளோ , மூன்று , நான்கு நாட்கள் கழித்து புனர் பூஜை செய்து உடனடியாக கரைத்து விடுகிறார்கள். எதுவுமே விரத மற்றும் பூஜை இல்லாத பட்சத்தில் நீங்கள் காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து அன்று முழுவதும் உச்சரித்துக் கொண்டே இருங்கள் விநாயகப்பெருமானின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.விநாயகர் காயத்ரி மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹே , வக்ரதுண்டாய தீமஹி, தந்நோ தந்தி ப்ரசோதயாத் இதுதான் விநாயகர் காயத்ரி மந்திரம் இதை உச்சரித்தால் போதும்.

إجمالي مرات مشاهدة الصفحة