👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பொழுதுபோக்கு சேவைகளில் முதன்மையானதாக யூடியூப் இருக்கிறது. யூடியூபில் இருக்கும் க்கள் தகவல்களை அறிந்து கொள்வதில் துவங்கி, அனைத்து வகையான பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்குகின்றன.
நெட்வொர்க் பிழை
எனினும், சமயங்களில் க்கள் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது யூடியூப் மீது கோபம் வரும். இணைய இணைப்பு சீரற்ற சமயங்களில் இதுபோன்ற பிரச்சனை அதிகம் ஏற்படும். பொதுவாக இந்த பிரச்சனையை சரி செய்ய இரு வழிமுறைகள் இருக்கின்றன.
பஃப்பரிங் நேரம் அல்லது நெட்வொர்க் பிழையை சரி செய்ய பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இதற்கு யூடியூபின் கேச்சியை க்ளியர் செய்யலாம். இதுதவிர தரத்தை மாற்றியமைத்தல் மற்றும் யூடியூப் பிரீமியம் சேவைக்கு சந்தா செலுத்தலாம். இதை எப்படி செய்வதென தொடர்ந்து பார்ப்போம்.
கேச்சி டேட்டாவை அழிப்பது:
1 - மொபைலில் டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்டில் க்ரோம் பிரவுசரை திறக்கவும்.
2 - இனி மூன்று கோடுகள் இருக்கும் ஆப்ஷன்ஸ் மெனுவை இயக்க வேண்டும்.
3 - மொபைலில் ஹிஸ்ட்ரி -- க்ளியர் பிரவுசிங் டேட்டா ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். டெஸ்க்டாப்பில் மோர் டூல்ஸ் -- க்ளியர் பிரவுசிங் டேட்டா ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
4 - ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் கணினியில் பயனர்கள் டேட்டாவை அழிப்பதற்கான நேரத்தை தேர்வு செய்யலாம். இந்த வசதி ஐபோனில் வழங்கப்படவில்லை.
5 - இனி குக்கீஸ் மற்றும் சைட் டேட்டா, கேச்டு இமேஜஸ் மற்றும் ஃபைல்ஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.
6 - க்ளியர் டேட்டா ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
தரத்தை மாற்றுவது
1 - தரத்தை மாற்ற யூடியூபில் கியர் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இதனை திரையின் கீழ்புறம் வலதுபுறமாக காணப்படும்.
2 - கியர் ஐகானில் தரத்தை குறைக்கலாம். இவ்வாறு செய்ததும் வேகமாக லோட் ஆகும்.
3 - இந்த அம்சம் டெஸ்க்டாப்பிலும் கிடைக்கிறது.
யூடியூப் பிரீமியம் சேவையில் இணைவது
1 - மேலே கொடுக்கப்பட்டவைகளை பின்பற்றியும் வை ஆன்லைனில் பார்க்க முடியவில்லை எனில், யூடியூப் பிரீமியம் சந்தாவில் இணையலாம். இதில் க்களை டவுன்லோடு செய்து ஆஃப்லைனில் பார்க்க வழி செய்யும்.
நெர்ட்களுக்கு யூடியூபில் ஸ்டேட்ஸ் ஃபார் நெர்ட்ஸ் எனும் பிரத்யேக வசதி வழங்குகிறது. இது இணைய இணைப்பின் வேகத்தை காண்பிக்கும். இதில் நெட்வொர்க் ஆக்டிவிட்டி, பஃப்பர் ஹெல்த் உள்ளிட்ட விவரங்களை வழங்கும். இது பிரச்சனையை சரி செய்யாது என்றாலும், இது பிரச்சனையை புரிந்து கொள்ள வழி செய்யும். இதை எப்படி செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
2 - டெஸ்க்டாப் யூடியூப் வில் ரைட் க்ளிக் செய்து ஸ்டேட்ஸ் ஃபார் நெர்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
3 - நெட்வொர்க் வேகம், ஃபிரேம்ஸ், ஆப்ஷனல் ரெசல்யூஷன், நெட்வொர்க் ஆக்டிவிட்டி, பஃப்பர் ஹெல்த் மற்றும் பல்வேறு விவரங்களை பார்க்க முடியும். இதனை யூடியூப் செயலியில் இருந்தபடியும் செயல்படுத்த முடியும்.
4 - ஐபோனில் செட்டிங்ஸ் ஆப்ஷனில் எனேபில் ஸ்டேட்ஸ் ஃபார் நெர்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
5 - ஆண்ட்ராய்டில் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- எனேபில் ஸ்டேட்ஸ் ஃபார் நெர்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U