'ஒரே மாணவர்' இரு மையங்களில் தேர்வு 'நீட்' ஆள்மாறாட்ட விசாரணையில் அம்பலம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 30, 2019

Comments:0

'ஒரே மாணவர்' இரு மையங்களில் தேர்வு 'நீட்' ஆள்மாறாட்ட விசாரணையில் அம்பலம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் ஒரே மாணவர் பெயரில் இரு மையங்களில் தேர்வு எழுதியது அம்பலமாகி உள்ளது. ஆவணங்களில் முறைகேடு செய்து கல்லுாரியில் சேர்ந்தது விசாரணையில் தெரிந்துள்ளது.'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் படித்த உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் கைதை தொடர்ந்து சென்னை தனியார் மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்த பிரவின், தந்தை சரவணன், ராகுல், தந்தை டேவிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாணவி அபிராமி, அவரது தாயாரிடம் சி.பி.சி.ஐ.டி, போலீசார் விசாரிக்கின்றனர்.நேற்று முன்தினம் இரவு 12:30 மணிக்கு பிரவின், தந்தை சரவணன் ஆகியோரை தேனி குற்றவியல் நடுவர் பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.ஒரே பெயர்; இரு மையங்கள்இதுவரை நடந்த விசாரணையில் புனே, மும்பை, லக்னோ, சென்னை மையங்களில் ஒரே மாணவர் பெயரில் இரு மையங்களில் 'நீட்' தேர்வு எழுதியது அம்பலமாகி உள்ளது. அதாவது நிஜ மாணவர் ஒரு மையத்திலும், போலி மாணவர் மற்றொரு மையத்திலும் தேர்வு எழுதி உள்ளனர். இதில் போலி மாணவர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். கல்லுாரியில் மாணவர் சேர்க்கை வரை போலி மாணவரே வந்துள்ளார். வகுப்புகள் தொடங்கிய பின் நிஜ மாணவர் வந்துள்ளார். மேலும் ஆவணங்கள் திருத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. ஆள் மாறாட்டம், ஆவணங்கள் முறைகேடு ஆகியவற்றிற்கு ரூ.20 லட்சம் வரை புரோக்கரிடம் தரப்பட்டுள்ளது.தடயவியல் சோதனைதனியார் கல்லுாரியில் படித்தராகுல், தந்தை டேவிஸ் நேற்று மதியம் 3:00 மணிக்கு உடல் தகுதி சான்றுக்காகதேனிஅரசுமருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.மாணவி அபிராமி, அவரது தாயார் இருவரும் மகளிர் போலீசார் பாதுகாப்பில்உள்ளனர். மாணவியின்தந்தை மாதவன் நேற்று அதிகாலையில் சரண் அடைந்தார்.
அபிராமியிடம் நடத்திய விசாரணையில் 'நீட் 'தேர்வு ஹால் டிக்கெட், சான்றிதழில் உள்ள போட்டோக்கள்ஓரளவிற்கு ஒத்துப்போகின்றன.சான்றிதழை தடயவியல் துறைக்கு அனுப்பி ஒப்புதல்அறிக்கை கேட்டுள்ளனர். முடிவு வரும்வரை கைது செய்யப்படமாட்டார்கள். இவ்வழக்கில் இதுவரை 3 மாணவர்கள், 3 தந்தையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., விஜயகுமார்கூறியதாவது:தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரியில் படித்த மாணவர் இர்பான்தலைமறைவாக உள்ளார். இவர் மொரிஷியஸ்நாட்டுக்கு தப்பலாம் என்றதகவலின்படிவிமான நிலையங்களில்கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.கேரளாவில் பயிற்சி மையம் நடத்தும் புரோக்கர் ரஷித்தை தேடி வருகிறோம். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள்,இணையத்தில் புகார் அனுப்பிய நபர் பற்றி அறிய தொழில்நுட்ப நிபுணர் உதவியை நாடியுள்ளோம். தேனி மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள் மீது முதல்வர்அளித்தபுகார் இன்னும் எங்களுக்கு வரவில்லை, என்றார்.தலைமறைவான டாக்டர் தந்தை கைது'நீட்' தேர்வில் ஆள்மாறாட்ட புகாரில் சிக்கியுள்ளவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரியில் படித்த இர்பான். இவரது தந்தை டாக்டர் முகமது சபி, வாணியம்பாடியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். 'நீட்' ஆள்மாறாட்ட புகார் வந்தவுடன் மருத்துவமனையை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். அவரை வேலுார் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து தேனிக்கு அழைத்து வருகின்றனர். அவருக்கும், புரோக்கர் ரஷித்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. முகமது சபி மூலமாக மற்றவர்கள் ரஷித்தை தொடர்பு கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டனர். மாணவர் இர்பான் ஏற்கனவே மொரிஷியஸ் நாட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்து பாதியில் கைவிட்டவர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews