Search This Blog
Saturday, September 28, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'அரசு மருத்துவக்கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க முடியுமா' என, தமிழக அரசிடம், சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.மருத்துவ படிப்பில், தகுதியான மாணவர்கள் தான் சேர்க்கப்படுகின்றனரா என்பதை பார்க்க வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளதாகவும் உயர் நீதிமன்றம்தெரிவித்துள்ளது.
கவுன்சிலிங்'
தமிழக மருத்துவக் கல்லுாரிகளில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான ஒதுக்கீட்டில், 207 இடங்கள் காலியாக உள்ளன.'இந்த இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப, தகுதி அடிப்படையில், முறையான கவுன்சிலிங் நடத்த, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள், கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வி.பி.ராமன், ''கடைசி இரண்டு நாட்களில் தான், காலியிடங்கள் ஏற்படும். தகுதி அடிப்படையை பின்பற்றும்படி, மருத்துவக் கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தி, மாணவர்கள் பட்டியல் அனுப்பப்படும்,'' என்றார்.அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த் பாண்டியன், ''கவுன்சிலிங் நடத்தப் பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வில், உச்ச நீதிமன்றத்தின் வழிமுறைகள் பின்பற்றப் பட்டுள்ளன,'' என்றார்.காலியிடங்கள்மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் வேல்முருகன் வாதாடியதாவது:
இரண்டாவது, மூன்றாவது கட்ட கவுன்சிலிங் நடத்தப் பட்டதற்கான ஆதாரங்களை, முதலில் அரசு சமர்ப்பிக்கட்டும்; இந்த இரண்டு கவுன்சிலிங்கையும் நடத்தி இருந்தால், காலியிடங்கள் ஏற்பட்டிருக்காது. ஆனால், இரண்டு கவுன்சிலிங்கையும் நடத்தவில்லை.வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான, ௨௦௦க்கும் மேற்பட்ட இடங்கள், கவுன்சிலிங் துவங்குவதற்கு முன், ஒரு சீட், 40முதல், 50லட்சம் ரூபாய் வரை, விற்பனையாகி உள்ளது.இதில், ௧௦௦ கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. தனியார்கல்லுாரிகள், வணிகம் செய்கின்றன.இவ்வாறு அவர் வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:தனியார் கல்லுாரிகள், வணிகம் மட்டும் அல்லாமல், சேவையும் செய்கின்றன. பள்ளி படிப்பு என்றால், தனியாரை நாடுபவர்கள், மருத்துவ படிப்பு என்றால், அரசு மருத்துவக் கல்லுாரிகளை நாடுகின்றனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், தனி ஒதுக்கீடு வழங்க முடியுமா என்பதை பார்க்க வேண்டும்.அப்போது, அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். நன்றாக படிக்கும் தகுதியான மாணவர்களும், அரசுப் பள்ளிகளில் சேர்வர். இல்லையென்றால், அரசுப் பள்ளிகளை காப்பாற்ற முடியாது. தமிழகத்தில், உயர் கல்வி சிறந்து விளங்குகிறது. உயர் கல்வி மையமாக, தமிழகம்உள்ளது.
அரசின் கடமைதனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, மாணவர்கள் பட்டியலை அனுப்பும் தேர்வுத்துறை, தகுதி அடிப்படையில் நியமிக்கப் பட்டுள்ளனரா என்பதை பார்க்க வேண்டாமா; தகுதியான மாணவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர் என்பதை பார்க்க வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளது.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட, ௧௦ தனியார் மருத்துவக் கல்லுாரிகளும், மாணவர்கள் பட்டியல் மற்றும் பெற்ற மதிப்பெண்கள், பின்பற்றிய தேர்வு நடைமுறை விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான இடங்களை நிரப்ப, தனி அட்ட வணையை அளிக்காததால், இந்தப் பிரச்னை எழுந்ததாக, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதற்கான விளக்கத்தை, மருத்துவ கவுன்சில் அளிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை, அக்., ௧௫க்கு தள்ளி வைத்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் தனி இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் 207 இடங்களும் நிரப்பப்படாததால், அவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூன்று கட்ட கலந்தாய்வுக்கு பின், காலியிடங்கள் இருந்தால் ஒரு இடத்துக்கு 10 மாணவர்கள் என்ற விகிதத்தில் பட்டியல் அனுப்பி வைக்கப்படும். ஆனால் அந்த பட்டியலின் அடிப்படையில் நிரப்பப்பட்டதா என்பது தெரியவில்லை என தெரிவித்தார். இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழககறிஞர், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவது தொடர்பாக இந்த நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கூறினார். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 207 இடங்களும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பள்ளிப்படிப்புக்கு தனியார் பள்ளிகளுக்கு செல்பவர்கள், மருத்துவ படிப்புக்கு மட்டும் அரசு மருத்துவ கல்லூரிகளை நாடுவது ஏன் என கேள்வியெழுப்பினர். மேலும், அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு ஏன் தனி இட ஒதுக்கீடு வழங்க கூடாது? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். பின்னர், தமிழகத்தில் உள்ள 10 தனியார் மருத்துவ கல்லூரிகளையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
அரசு பள்ளியில் படித்தால் அரசு மருத்துவ கல்லூரியில் இடம்! புதிய விதி வருமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.