அங்கீகாரத்தை புதுப்பிக்க மறுப்பு 111 பி.எட்., கல்லூரிகள் மூடும் அபாயம் : ஆசிரியர்கள், மாணவர்கள் கலக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 09, 2019

அங்கீகாரத்தை புதுப்பிக்க மறுப்பு 111 பி.எட்., கல்லூரிகள் மூடும் அபாயம் : ஆசிரியர்கள், மாணவர்கள் கலக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கல்வியியல் பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெறவும், கல்லூரிகள் நடத்த பெறப்பட்ட அங்கீகாரத்தை புதுப்பிக்கவும் வேண்டிய கட்டணத்தை செலுத்தாமல் உள்ள 111 பி.எட்., கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனால் அந்த கல்லூரிகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பிஎட் கல்லூரிகள் 7, அரசு நிதியுதவி பெறும் பிஎட் கல்லூரிகள் 14 உள்ளன. இவற்றில் 2,400 பிஎட் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடந்த கடந்த மாதம் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் மொத்தம் 4,061 விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்று சென்றனர். அதில் 3,800 பேர் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினர். இதையடுத்து, கவுன்சலிங் மூலம் இவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.
கவுன்சலிங் சென்னையில் உள்ள லேடிவெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கவுன்சலிங்கை தொடங்கி வைத்து, சிறப்பு பிரிவினருக்கு இட ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: அரசு பிஎட் கல்லூரிகள் 7, அரசு நிதியுதவி பெறும் பிஎட் கல்லூரிகள் 14 இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ள இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் இன்று தொடங்கியுள்ளது. இது 13ம் தேதி வரை நடக்கும். 19ம் தேதி பிஎட் கல்லூரிகள் செயல்படத் தொடங்கும். இந்நிலையில், இன்று தொடங்கியுள்ள கவுன்சலிங்கில் இன்று மட்டும் கண்பார்வையற்றவர்கள் 35 பேர் பங்கேற்று இட ஒதுக்கீடு ஆணைகள் பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் 96. அதற்காக அழைக்கப்பட்டவர்கள் 98 பேர். முன்னாள் ராணுவத்தினருக்காக 21, அழைக்கப்பட்டவர்கள் 38 பேர். பொதுப்பிரிவினருக்கு நாளை முதல் கவுன்சலிங் தொடங்கும்.
இந்நிலையில், பொறியியல் படித்த மாணவர்களும் பிஎட் படிக்க விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக கணக்கு, பொருள் அறிவியல், உயிர் அறிவியல், கணிப்பொறி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளை படித்தவர்களுக்கு பிஎட் இடங்களில் 5 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு 71 இடங்கள் கிடைக்கும். அதற்காக 61 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது தவிர 697 தனியார் பிஎட் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 111 கல்லூரிகள் அங்கீகாரம் மற்றும் இணைப்பு ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டிய கட்டணத்தை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. அந்த கல்லூரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளோம். அப்படி கட்டணம் செலுத்தி கல்லூரிகளின் அங்கீகாரம் புதுப்பிக்காமல் உள்ள 111 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படமாட்டாது. கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் பிஎட் படித்தவர்களை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்று ஒருவர் வழக்கு போட்டுள்ளார். இன்று அந்த வழக்கில் இடைக்கால தடை பெற்றுள்ளோம். இதையடுத்து தேடுதல் குழு அமைத்து துணைவந்தர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். இதுவரை கடந்த பல ஆண்டுகளாக அங்கீகாரம் மற்றும் இணைப்புக்காக கோடிக்கணக்கில் கட்டணம் செலுத்தாமல் உள்ள 111 பிஎட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என்றால் அந்த கல்லூரிகள் மூடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews