சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவு தாமதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 06, 2019

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவு தாமதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகியுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, நாடு முழுவதும், மார்ச்சில் முடிந்தது. விடைத்தாள் திருத்தம் முடிந்து, இறுதி கட்ட சரிபார்ப்பு பணிகளும் முடிவுக்கு வந்துள்ளன.இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகும் என, பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டது. தேர்வு முடிவுக்காக, நேற்று காலை முதல், மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால், 'ரிசல்ட்' வெளியாகவில்லை. இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என, சி.பி.எஸ்.இ., வாரியம், நேற்று பகலில், அறிவிப்பு வெளியிட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை குறிப்பிடவில்லை. ஆனால், 'தேர்வு முடிவு வெளியாவதற்கான தேதியை, விரைவில், சி.பி.எஸ்.இ., அறிவிக்கும்' என, அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, பெற்றோர் கூறுகையில், 'மாநில பாடத்திட்டத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டு, பிளஸ் 1 சேர்க்கை நடந்து வருகிறது. பல மாணவர்கள், பிளஸ் 1க்கு, மாநில பாடத் திட்டத்துக்கு மாற முடிவு செய்துள்ளனர். 'ஆனால், 10ம் வகுப்பு தேர்வு முடிவு வராததால், பிளஸ் 1 சேர்க்கைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது' என்றனர். சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று கூறப் பட்டு வந்த நிலையில் இன்று முடிவுகள் வெளியாகாது என்று கூறப் பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என பரவிய தகவல் உண்மையல்ல எனவும், ரிசல்ட் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 18 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15-ம்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 12.9 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு கடந்த 2-ம் தேதி வெளியிடப்பட்டது. 83.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 5) வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 18.27 லட்சம்மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த ஆண்டுமுதல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலை சான்றிதழுடன் சேர்த்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள், பெற்றோருக்கு இலவச கவுன்சலிங் வழங்க 71 நிபுணர்கள் கொண்ட சிறப்பு உதவிக்குழுவை சிபிஎஸ்இ அமைத்துள்ளது. 1800-118-004 என்ற இலவச தொலைபேசி எண் அல்லது counselling.cecbse@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக இந்த உதவிக் குழுவை தொடர்பு கொள்ளலாம். தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள், அவர்களது பெற்றோருக்கான உளவியல் ஆலோசனைகள், மேல்நிலைக் கல்வி குறித்த தகவல்கள் எனஅனைத்துவிதமான ஆலோசனைகளும் இதன்மூலம் வழங்கப்படும்.வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டில் ஒரு மாதம் முன்னதாகவே பொதுத் தேர்வுமுடிவுகளை சிபிஎஸ்இ வெளியிடு வது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews