👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
இன்சைட்-2019 என்ற பள்ளி மாணவர்களுக்கான கட்டணமில்லா பயிலரங்கை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தப் பயிலரங்கில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
இதுகுறித்து பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக அறிவியல் விஞ்ஞான சிந்தனை, பயன்பாடுகள் இருந்து வந்துள்ளன.
அதில் கணிதம், வானியல், ஆங்கில இலக்கியத்தின் பங்கு எந்த அளவுக்கு இருந்துள்ளன என்பதை எடுத்துக்கூறி, மாணவர்களிடையே மாறுபட்ட சிந்தனைகளை ஊக்குவிக்கவும், குறுக்கு வழி நடைமுறைகள், மனக் கணக்கு மூலம் வேகமான கணித தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள வைப்பதுமே இந்தப் பயிலரங்கின் நோக்கம்.
இந்திய கணிதம், லாஜிக், வானியல் என்ற மூன்று தலைப்புகளின் கீழ் இந்தப் பயிலரங்கம் நடத்தப்படும்.
அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மே, 29, 30, 31 ஆகிய மூன்று தினங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்பட உள்ள இந்த பயிலரங்குக்கு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், மதிய உணவை மாணவர்கள் எடுத்து வந்துவிட வேண்டும்.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மே 19-ஆம் தேதிக்கு முன்பாக பதிவு செய்யவேண்டும். பதிவு செய்தவர்களுக்கு, பயிலரங்கில் அனுமதிக்கப்படுவதற்கான உறுதிக் கடிதம் மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு மே 20-ஆம் தேதி அனுப்பிவைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U