கல்லுாரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழுவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 07, 2019

கல்லுாரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழுவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கல்லுாரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழுவில் சுயநிதி கலை, அறிவியல் கல்லுாரிகளின் சங்க நிர்வாகிகள், உயர்கல்வித்துறை இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்,' என மதுரையில் முதல்வர் பழனிசாமியிடம் தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் தனியார் கல்லுாரிகள் சங்கம் வலியுறுத்தியது.திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் பழனிசாமி மதுரையில் முகாமிட்டுள்ளார். அவரை மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரிகள் நிர்வாகிகள் சங்கத் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் தனியார் கல்லுாரிகள் சங்கத் தலைவர் அஜித் குமார் லால் மோகன், செயலர் சேதுபதி மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.
அவர்கள் அளித்த மனு: கல்லுாரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு 2018 ஆக., 31ல் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சிங்காரவேலுவை தலைவராக கொண்டு அமைக்கப்பட்டது. அந்த குழுவிடம் சில பிரச்னைகளை சங்கம் கூறியது. ஆனால் அவை தீர்க்கப்படவில்லை. எனவே உயர்நீதிமன்றத்தை அணுகி கட்டண நிர்ணயக்குழுவிற்கு எதிராக தடையுத்தரவு பெற்றோம்( தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை).தன்னாட்சி உள்ள மற்றும் இல்லாத, நகர்ப்புற மற்றும் கிராமப்புற கல்லுாரிகள் அனைத்திற்கும் ஒரே மாதிரி கட்டணம் நிர்ணயித்தால் நெருக்கடியை உருவாக்கும். கல்லுாரி கல்வி இயக்குனர், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நிர்வாகிகள் ஆகியோர் இல்லாத ஒரு குழு நிர்ணயிக்கும் கட்டணம், கல்லுாரி நிர்வாகம் மற்றும் மாணவர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தும். கட்டண நிர்ணயத்திற்கு குறிப்பிட்ட சில நடைமுறைகள் இல்லாமல் இருந்தால் குழுவிற்கு முறையற்ற அதிகாரங்களை வழங்கி விடும். கல்லுாரிகள், தங்கள் துறைகளை, ஆசிரியர்களை, இதர தேவைகளை மேம்படுத்தி கொண்டு இருக்க வேண்டும். உயர்கல்வி தரத்திற்கு ஏற்ப கல்லுாரியை மேம்படுத்த வேண்டும். உயர்கல்வி தரத்திற்கு தேவையான அம்சங்கள் இந்த உத்தரவில் இல்லை.சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் அனைத்து செலவுகளையும் தாங்களே செய்ய வேண்டியுள்ளது.
1984 முதல் தனியார் கல்லுாரிகளுக்கு மானியம் வழங்குவதை அரசு நிறுத்தி விட்டது. சுயநிதி படிப்புகளை நடத்தும் உதவி பெறும் கல்லுாரிகளையும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளையும் வேறுபட்ட நிலையில் தரம் பிரிக்க இந்த உத்தரவு தவறியுள்ளது. எனவே கட்டண நிர்ணயக்குழுவில் சங்க நிர்வாகிகள், உயர்கல்வித்துறை இயக்குனரை சேர்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.பல்கலை மானிய குழு விதிகளிலிருந்துசுயநிதி கல்லுாரிகளுக்கு விலக்குபல்வேறு பல்கலை உறுப்பு கல்லுாரி ஆசிரியர்கள் கூட செட், நெட், ஸ்லெட், பி.எச்.டி., தகுதி பெற்றிருக்கவில்லை. பல்கலை மானியக்குழுவிடமிருந்து சுயநிதி கல்லுாரிகள் சம்பளம், மானியம் பெறாத நிலையில் சுயநிதிக் கல்லுாரிகளில் ஆசிரியர் நியமனம் மற்றும் சுய நிதி படிப்புகளுக்கான தகுதியையும், உதவி பெறும் கல்லுாரிகளுக்கான மாநில பல்கலைகளுக்கான சட்டப்படி மாநில பல்கலைகளும், மாநில அரசும் நிர்ணயிக்கின்றன. சுயநிதி கல்லுாரிகள் பல்கலை மானிய குழுவிடமிருந்து மானியம் பெறாத நிலையில், கல்லுாரி ஆசிரியர்களின் தகுதியை நிர்ணயிக்கும் உரிமைகள் மாநில பல்கலை சிண்டிகேட் மற்றும் மாநில அரசுக்கு உள்ளன.
பல்கலை மானிய குழு நிர்ணயித்த தகுதிகளை கொண்டவர்களின் பற்றாக்குறையால் அவர்களை நியமிக்க இயலவில்லை. சுயநிதி கல்லுாரிகளில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். நெட், செட், ஸ்லெட், பி.எச்.டி.,யை கட்டாயமாக்கினால் 35 ஆயிரம் பேர் வேலையிழப்பர். பல்கலை மானியக்குழு விதிகளை பூர்த்தி செய்ய கல்லுாரிகளுக்கு ஐந்தாண்டுகள் அவகாசம் வழங்கலாம் அல்லது சுயநிதி கல்லுாரிகளுக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்கவும் சங்கத்தினர் வலியுறுத்தினர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews