ஈஸியா கல்விக் கடன் பெற என்ன செய்ய வேண்டும்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 03, 2020

ஈஸியா கல்விக் கடன் பெற என்ன செய்ய வேண்டும்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் ஒருவருக்கு வழங்கப்பட்ட சராசரி கல்விக்கடன் 5.73 லட்சம் ரூபாயாக இருந்துள்ளது. இதுவே 2018ல் 8.5 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.' என டிரான்ஸ்யூனியன் (TransUnion CIBIL) புள்ளிவிவரம் கூறுகிறது. சிறந்த கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது எதிர்காலத்தை மாற்றும் வெற்றிகரமான மைல்கல்லாக அமையக்கூடும். ஆனால், கல்விக்கான செலவு அதிகரித்துக்கொண்டே வரும் சூழலில் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பெரிதும் உதவக்கூடியது கல்வி கடன்கள். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வலுவடைந்துவந்தாலும் வெளிநாட்டில் போய் படிப்பது இன்னும் அதிக செலவு பிடிப்பதாகவே இருக்கிறது. இதனால் கல்விக்கடன் பெறுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. 'இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் ஒருவருக்கு வழங்கப்பட்ட சராசரி கல்விக்கடன் 5.73 லட்சம் ரூபாயாக இருந்துள்ளது. இதுவே 2018ல் 8.5 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.' என டிரான்ஸ்யூனியன் (TransUnion CIBIL) புள்ளிவிவரம் கூறுகிறது. எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காக கல்விக் கடன் பெற நினைத்தால் அதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம்.
ஒப்பிட்டுப் பார்த்தல்:
கடன் வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தப் ஒப்பீட்டுப் பணியை எளிதாக்கும் இணையதளங்கள் உள்ளன. அவற்றில் பல வங்கிகளின் வட்டிவிகிதத்தை ஒரே இடத்தில் பார்க்க முடியும். உதாரணமாக மத்திய அரசின் வித்யா லெட்சுமி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்விக் கடன் பற்றி அதற்கான பிரத்யேக இணையதளத்தில் முழு விவரமும் அறியலாம்.
கடனில் பங்கு:
100% தொகையை கல்விக் கடனாக பெற முடியும் என்றாலும் ரிசர்வ் வங்கி சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்தியாவில் உயர்கல்வி பெற 4 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றால் 5% தொகையை கடன் பெறுபவரே செலுத்த வேண்டும். வெளிநாட்டில் படிக்க 4 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றால் 15% தொகையை இவ்வாறு செலுத்த வேண்டும். 4 லட்சம் ரூபாய்க்குக் குறைவான கடனுக்கு இந்த நிபந்தனை இல்லை. 4 முதல் 7.5 லட்சம் ரூபாய்க்கு மட்டும் இந்த நிபந்தனை பொருந்துகிறது. 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக்கடன் பெறும்போது, ஏதேனும் ஒரு சொத்தை வங்கியிடம் பிணையாக ஒப்படைக்க வேண்டும். இது கடனைத் திருப்பிச் செலுத்தியதும் திரும்பக்கிடைத்துவிடும்.
கிரெடிட் ஸ்கோர்:
ஏற்கெனவே கடன் பெற்ற பெற்றோர் தங்கள் கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் கடன் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருக்கும். பெற்றோரின் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இல்லாதபோது உறவினரோ நண்பரோ கடனுக்க உத்தரவாதம் அளிப்பவராக இருக்கலாம்.
திருப்பிச் செலுத்துவதை திட்டமிடுதல்:
வட்டி முதல் மாதத்திலேயே சேரத்தொடங்கும் என்றாலும், சில சமயங்களில் மாணவர்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்த ஓராண்டு வரை அவகாசம் கொடுக்கப்படும். இந்த ஓராண்டு அவகாசத்துக்குப் பின் தவணையைச் செலுத்தத் தொடங்கும் வசதி இதன் மூலம் கிடைக்கிறது. ஆனால், இதற்கு முன்கூட்டியே செலுத்துவது சுமையைக் குறைக்கும். எனவே எப்போது தவணையை செலுத்த வேண்டும் என்பதை முன்பே திட்டமிட்டுவிடுவது நல்லது.
கூடுதல் பலன்கள்:
கல்விக்கடன் பெறும்போது கூடுதல் பலனாக வரி விலக்கும் கிடைக்கும். வருமானவரித்துறை சட்டத்தின் பிரிவு 80E மூலம் கல்விக்கடன் மீதான வட்டி முழுதுக்கும் வரி விலக்கு பெற முடியும். முதல் முறை கல்விக்கடன் பெற்று முறையாக திருப்பிச் செலுத்துவது கிரெடிட் ஸ்கோர் உயரவும் உதவக்கூடும். இவற்றை கவனத்தில் வைத்துக்கொண்டு கல்விக்கடனைப் பெற்றுக்கொள்ளுங்கள். சரியான நேரத்தில் திரும்பச் செலுத்துங்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews