சட்டக்கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி?! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 16, 2019

சட்டக்கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி?!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ராமநாதபுரம் சட்டக்கல்லூரிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் அங்கு பயிலும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். ராமநாதபுரம் பகுதிக்கு சட்டக்கல்லூரி வேண்டும் என்ற அங்குள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெருங்குளம் பகுதியில் கல்லூரி துவக்கப்பட்டது. கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்காலிகமாக அங்குள்ள உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தில் கல்லூரி தற்போது இயங்கி வருகிறது.
இங்கு பயிலும் மாணவர்களுக்கும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பெரிய தலைவலியாக இருப்பது அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடை. ராமநாதபுரத்தில் இருந்து பெருங்குளம் முகப்புச் சாலை வந்திறங்கி, அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு கல்லூரி அமைந்திருக்கும் பள்ளி வளாகத்துக்கு நடந்து செல்ல வேண்டும்.
முகப்புச் சாலை அருகே அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள், சாலையில் நடந்து வருவோரிடம் அவ்வப்போது வம்பிழுப்பதும், அது மோதலாக மாறுவதும் தொடர்கதை என்கின்றனர் அப்பகுதி மக்கள். குடிமகன்கள் எந்நேரமும் பாட்டிலும் கையுமாக நடமாடும் இடத்தை நடுக்கத்துடன் கடந்து வருகின்றனர் கல்லூரி மாணவிகள். இப்படிப்பட்ட சூழலில் தங்கள் பெண் பிள்ளைகளை கல்லூரிக்கு தனியே அனுப்ப பயந்து, அவர்களுடனேயே கல்லூரிக்கு வருகின்றனர் பெற்றோர்.
இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறும் பெற்றோர், மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் இதுகுறித்து கேட்டபோது, உடனடியாக அங்கிருந்து கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews