(மார்ச் 31) இந்த 10 வேலைகளை செய்து முடித்து விடுங்க - இல்லாவிட்டால் அவஸ்தைபடுவீங்க - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 20, 2019

(மார்ச் 31) இந்த 10 வேலைகளை செய்து முடித்து விடுங்க - இல்லாவிட்டால் அவஸ்தைபடுவீங்க


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459


நடப்பு 2018-19ஆம் நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் நீங்கள் செய்யவேண்டிய 10 முக்கியமான வேலைகளை முடிக்காவிட்டால் அதன் பின்பு நீங்கள் தேவை இல்லாமல் அலைய வேண்டிய நிலை ஏற்படும். மிகவும் அத்தியாவசியமான ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்காவிட்டால் உங்களால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய முடியாமல் போய்விடும். TDS வரியை உங்கள் கணக்கில் வரவு வைக்க முடியாது

காகித வடிவத்தில் உள்ள பங்குகளை மற்றவர்களுக்கு மாற்றுவதற்கும் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் டிமேட் கணக்கை தொடங்க வேண்டியது கட்டாயமாகும். ஒரு வழியாக நடப்பு 2018-19ஆம் நிதியாண்டை மிகவும் கஷ்டப்பட்டு தள்ளிக்கொண்டு வந்து வாசல் வரைக்கும் வந்து விட்டோம். இதோ இன்னும் 2 படிகள்(நாட்கள்) தான் உள்ளன. அதற்குள் நீங்கள் இது வரையிலும் செய்யாமல் விட்ட குறை தொட்ட குறையாக விட்ட சில முக்கியமான வேலைகளை உடனடியாக முடித்து விடுங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால் பின்பு அதற்காக நீங்கள் அலையோ அலை என்று அலையவேண்டும். நீங்கள் உங்களுடைய சோம்பேறித்தனத்தால் இதுவரையிலும் செய்யாமல் விட்ட முக்கியமான வேலைகள் எவை என்பதை பார்க்கலாம்.
ஆதார் பான் எண் இணைப்பு முக்கியம்
உங்களுடைய ஆதார் எண்ணை பான் நம்பருடன் இணைப்பது கட்டாயமாகும். உச்ச நீதிமன்றமும் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்க பான் நம்பருடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தியது.
மத்திய நேரடி வரிகள் வாரியமும் ஆதார் எண்ணை பான் நம்பருடன் இணைக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனவே சிரமம் பார்க்காமல் இன்னும் 2 நாட்களுக்குள் ஆதார் எண்ணை பான் நம்பருடன் இணைக்கும் வேலையை பாருங்கள். இல்லாவிட்டால் உங்களால் வருமான ரிட்டன் தாக்கல் செய்ய முடியாது.

டீமேட் கணக்கு அவசியம்
டீமேட் கணக்கு என்பது பங்குச் சந்தையில் ஈடுபடுவதற்கு மிகவும் அவசியம். இதுவரையில் காகித வடிவில் நீங்கள் ஏதாவது பங்குகளை வைத்திருந்தால் அதை உடனடியாக டீமேட் கணக்கு தொடங்கி அதற்கு மாற்றி விடுங்கள். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் காகித வடிவத்தில் உள்ள பங்குகளை மாற்ற முடியாது. 20 வருடங்களுக்கு முன்பு வாங்கிய காகித வடிவ பங்குகள் ஏதாவது இருந்தால் உடனே அதை டீமேட் கணக்கு தொடங்கி அதற்கு மாற்றி விடுங்கள். இதை நினைவு படுத்துவதற்கு முக்கிய காரணம், உங்கள் பெற்றோர் அல்லது நண்பர்கள் யாராவது உங்களுக்கு அன்பளிப்பாக காகித வடிவத்தில் பங்குகளை அளித்திருந்தால் இன்றைக்கு அதன் மதிப்பு லட்த்திலோ அல்லது கோடியிலோ இருக்கலாம். அது உங்கள் வாழ்க்கையை மாற்றும் திருப்பு முனையாகக் கூட இருக்கலாம் என்பதை மறக்கவேண்டாம்.

வரிச்சலுகைக்கான முதலீடுகள்
2018-19ஆம் நிதியாண்டுக்கான வரிச்சலுகை பெற வேண்டுமானால் நீங்கள் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் வரிச்சலுகை உள்ள 80சி முதலீட்டுத் திட்டங்களில் மார்ச் 28ஆம் தேதிக்குள் முதலீடு செய்துவிடுங்கள். இல்லை என்றால் தேவை இல்லாமல் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது உங்கள் பணத்தை அநாவசியமாக இழக்க நேரிடும்.
2017-18ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி ரிட்டன்
நீங்கள் 2017-18ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டனை நிர்ணயிக்கப்பட்ட தவணை தேதிக்குள் தாக்கல் செய்திருக்கலாம். அதில் ஏதாவது தவறுதலாக நீங்கள் கணக்கு காட்டி இருந்தால் அதை திருத்தி மறுமதிப்பு செய்து வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய முடியும். எனவே தாமதம் செய்யாமல் உடனே அதை செய்யுங்கள்.

வேலை மாற்றத்தை தெரிவிப்பது அவசியம்
நீங்கள் 2018-19ஆண்டில் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தை விட்டு விட்டு வேறு நிறுவனத்திற்கு மாறினாலும் அந்த விபரத்தை தற்போது வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு தெரியப்படுத்துவது கட்டாயம். காரணம் முன்பு வேலை பார்தத நிறுவனத்தில் உங்கள் சம்பளத்தில் வருமான வரி(TDS) பிடித்திருந்தால் அதை தற்போது வேலை பார்க்கும் நிறுவனமும் கணக்கில் எடுத்துக்கொள்ளும். இல்லை என்றால் அதற்கும் சேர்த்து நீங்கள் வரி கட்டவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

முதலீடு தொடர்பான ஆதாரம்
2018-19ஆம் ஆண்டுக்கான வரிச்சலுகைக்காக நீங்கள் ஏதாவது முதலீடு செய்திருந்தால் அதற்கான முறையான ஆதாரங்களை உடனடியாக நீங்கள் வேலை பார்க்கும் நிறுவன உயர் அதிகாரிகளிடம் சமர்பித்துவிடுங்கள். ஆதாரம் இல்லாவிட்டால் பின்னர் அதற்கும் சேர்த்து உங்கள் மார்ச் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்தம் செய்யயப்படும். அதன் பிறகு நீங்கள் வெறும் கையுடன் வீட்டுக்கு நடையைக் கட்டவேண்டியது இருக்கும்.

பான் நம்பர் வங்கிக் கணக்கு இணைப்பு
நீங்கள் உங்களின் பான் நம்பரை வங்கிக்கணக்குடன் இணைத்துவிட்டால் பரவாயில்லை. இல்லாவிட்டால் உடனே இணைத்துவிடுங்கள். பான் நம்பதை வங்கிக் கணக்குடன் இணைத்தால் மட்டுமே வருமான வரி ரீஃபண்டை பெறமுடியும். இதற்கான சுற்றறிக்கையை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஏற்கனவே அனுப்பிவிட்டது. ஆகவே மார்ச் 31ஆம் தேதிக்குள் அதை செய்துவிடுங்கள்.

வரிச்சலுகைக்காண படிவம் (படிவம் 15ஜி/15ஹெச்
நீங்கள் வரிப் பிடித்தம் செய்யும் வரம்பிற்குள் வரவில்லை என்பதற்கான படிவம் 15ஜி/15ஹெச் ஆகியவற்றை நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கி அதிகாரியிடம் சமர்பித்துவிடுங்கள். நீங்கள் வங்கியில் ஏதாவது முதலீடு செய்திருந்தால் அதற்கான வட்டி ரூ.40000 வரையில் இருந்தால் அதற்காக இந்த படிவத்தை சமர்பிக்க வேண்டும்.

மூலதன ஆதாய வரி
நீங்கள் முதலீடு செய்துள்ள தொகையில் இருந்து நடப்பு 2018-19ஆம் நீதியாண்டில் ஏதாவது வருவாய் அல்லது வட்டி வருவாய் பெற்றிருந்தால் அதற்கான மூலதன ஆதாய வரியை (Capital Gain Tax) வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்தி விடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் வரியை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதை எல்லாம் உடனடியாக நீங்கள் செய்து முடித்தால் வரும் 2019-20ஆம் நிதியாண்டை நிம்மதியாக எதிர்கொள்ளலாம்.


Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews