உதவித்தொகைக்கு உதவும் வலைத்தளங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 17, 2019

உதவித்தொகைக்கு உதவும் வலைத்தளங்கள்


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில் இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே அதற்கான ஒரு மாற்று ஏற்பாடு, கல்வி செலவை சமாளிக்க திணறும் மாணவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். ஆகவே கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்களின் முகவரிகளை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். இத்தளங்களை ஆராய்வதன் மூலம் கல்வி உதவித்தொகை சம்பந்தமான பல அரிய, உபயோகமான தகவல்களைப் பெறலாம்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றி இந்த வலைத்தளம் பல தகவல்களைக் கொண்டுள்ளது. அதைத்தவிர பரிசுகள், போட்டிகள், ஆய்வு படிப்புகள், இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தேர்வு முடிவுகள் ஆகியவைப் பற்றிய தகவல்களையும் தருகிறது. இந்த வலைத்தளத்தில் தகவல்கள் அடிக்கடி புதுப்பிக்கப்படுகின்றன. மேலும் இதில் நிபுணர்களின் கேள்வி-பதில் பகுதியும் அடங்கியுள்ளது.
இந்த தளம் மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் பள்ளிகல்வி-கல்வியறிவு மற்றும் உயர்கல்வி துறை ஆகிய 2 துறைகள் உள்ளன. இந்திய அரசாங்கத்தால் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் உதவித்தொகை அறிவிப்புகள் மற்றும் பிற நாடுகளால் இந்திய மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் சலுகைகள் பற்றி இந்த தளம் குறிப்பான விவரங்களை கொண்டுள்ளது.
இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டப் படிப்பு மற்றும் அதற்கு பிந்தைய உதவித்தொகை நிலவரங்களை தெரிந்துகொள்ள இந்த வலைத்தளம் உதவுகிறது. பல்கலைக்கழக வாரியாக உதவித்தொகை விவரங்களை அறிய முடிவதோடு, இந்த தளத்திலிருந்து செய்தி மடல்களையும் பெறமுடியும். மேலும் இதில் மாணவர்களுடைய சில கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது. இதைதவிர வெளிநாட்டு படிப்புகள் சம்பந்தமான உதவிக்குறிப்புகளை தருவதோடு அதற்கான உதவித்தொகை பெறுவதைப் பற்றியும் தகவல் தருகிறது. அதேசமயம் இந்த தளத்தில் நுழைந்து தேட சற்று சிரமம் எடுத்து கொள்ள வேண்டியிருக்கும்.
வெளிநாட்டு படிப்பிற்கான உதவித்தொகை கோருபவர்களுக்கானது இந்த தளம். முக்கியமாக மற்றும் குறிப்பாக அமெரிக்காவில் படிப்பதற்கான விவரங்களை இது கொண்டுள்ளது.
இந்த தளம் அமெரிக்க படிப்புகளை பற்றிய தகவல்களை மட்டுமே கொண்டுள்ளது.
உலகளாவிய அளவில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு பிந்தைய காலம் மற்றும் பட்டப்படிப்பு அல்லாதவற்றுக்காக கிடைக்கும் உதவித்தொகைகள் பற்றிய விவரங்களை கொண்டுள்ளது. ஆனால் இதில் நாடுவாரியாக விவரங்கள் இல்லை.
இந்த வலைத்தளம் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு உதவித்தொகை விவரங்களை கொண்டிருப்பதோடு, சமூக அறிவியல் மற்றும் கோடைகால வகுப்புகள் பற்றிய விவரங்களையும் கொண்டுள்ளது. இதில் நாடுவாரியாக விவரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த தளத்தில் நிதி சம்பந்தமான விதிமுறைகள் நன்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதிலுள்ள கட்டுரைகள் மூலமாக ஒன்றிலிருந்து மற்றவைக்கு தொடர்பு கிடைத்தாலும், சில கட்டுரைகள் ஆர்வமிக்கதாக இருக்காது. மேலும் சமீபத்திய நிதிசம்பந்தமான விதிமுறைகள் இதில் கிடைப்பதில்லை.

மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews