👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை, மாலை நேரங்களில், குறைந்த அரசுப்பேருந்துகளே இயக்கப்படுவதோடு, அவசர கதியில் செல்வதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
கோவை மாவட்டத்தில், 2 ஆயிரத்து 10 அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் இயங்கு கின்றன. பெரும்பாலான தனியார் பள்ளிகளில், வாகன வசதி உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், இலவச பஸ் பாஸ் மூலம், அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
காலை 8:30 மணி அளவிலும், மாலை 5:00 மணிக்கு பின்பும், இப்பேருந்துகளில் ஏற மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்நேரங்களில், அதிக அரசுபேருந்துகள் இயக்க வேண்டுமென்ற, நீண்டநாள் கோரிக்கை நிலுவையில் உள்ளது.குறிப்பாக, நகரின் மையப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, பேருந்து மூலம் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு, நாளுக்கு நாள் கேள்விக் குறியாகி வருகிறது.
பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள் இருந்தால், சில ஓட்டுனர்கள் சற்று துாரம் தள்ளி சென்று தான், பேருந்தை நிறுத்துகின்றனர். முதுகில் புத்தகப்பையை சுமந்தபடி மாணவர்கள், இந்த பஸ்களில் ஓடி சென்று ஏற வேண்டியதுள்ளதால், விபத்துக்கள் அதிகரிக்கின்றன.பஸ் ஓட்டுனர்களின் அலட்சியம் காரணமாக, நேற்று செல்வபுரம் வழியாக, காந்திபுரம் செல்லும் பேருந்தில், (டி.என்: 38, என்- 2110 ) மாணவர்கள் தொங்கி கொண்டு பயணம் செய்தனர்.
செல்வபுரம் நிறுத்தத்தில் நின்ற இப்பேருந்து, பயணிகள் இறங்குவதற்கு முன்பே இயக்கப் பட்டதால், பள்ளி மாணவி ஒருவர், தவறி கீழே விழுந்தார். இச்சம்பவம், பார்த்தவர்களை பதைபதைக்க செய்தது. நல்லவேளை, சிறு காயத்துடன் அம்மாணவி தப்பினார். பஸ்சை தொடர்ந்து ஏதேனும் வாகனம் வந்திருந்தால், அம்மாணவியின் கதியை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.ஓட்டுனர்களின் அலட்சியத்தால் நிகழும், இதுபோன்ற சம்பவங்களுக்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் காலை, மாலை வேளை யில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்