👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு வளர்ச்சியுடனும் பல பயங்கர பக்க விளைவுகள் மற்றும் குறைபாடுகள் மனித இனத்தைத் தாக்கி கொண்டுதான் இருக்கிறது.
இவற்றில் நாம் என்றதாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள், மொபைல் போன்கள், டேப்லெட்கள் போன்ற சாதனங்கள் அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இவற்றின் ஆபத்தை அறிந்தும் பயன்படுத்தி வருகிறோம்
இவற்றின் ஆபத்தை அறிந்தும், பல சமயங்களில் நேரில் கண்டும் இன்னும் நாம் இவற்றைப் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். தற்போது கிட்டத்தட்ட அனைத்து வயதினரும் ஸ்மார்ட்போன்கள், மொபைல் போன்கள், டேப்லெட்களை பயன்படுத்தி வருகின்றனர்.
பெற்றோரின் அஜாக்கிரதை
இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் பெற்றோர்களும் கூட தங்கள் குழந்தைகளைக் கண்டிக்காமல் அவர்களுக்கும் மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கத்தை பழக்கப்படுத்திவிடுவது தான் கொடுமை. ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் கதிர்வீச்சினால் ஏற்படும் விளைவுகள் பெரியவர்களை விட 100 மடங்கு குழந்தைகளை பாதிக்கிறது என்பதே உண்மை.
ஐபேட் மற்றும் டேப்லெட்களில் அதிக கதிர்வீச்சு
ஐபேட் மற்றும் மற்ற டேப்லெட் சாதனங்கள் அனைத்தும் டேபிள் இல் வைத்துப் பயன்படுத்தப்பட வேண்டிய சாதனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபபேட் மற்றும் டேப்லெட்களில் இருந்து வெளிப்படும் நச்சு கதிர்வீச்சுகள் ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் போன்களை விடச் சற்று அதிகம் என்கின்றனர் அறிவியலாளர்கள்.
சரியா என்று சிந்தியுங்கள்
ஐபேட் மற்றும் டேப்லெட் தயாரிக்கும் இடத்தில்,அவற்றை உருவாக்கிய பொறியாளரிடமிருந்து 20 சென்டி மீட்டர் தொலைவில் தான் இந்தச் சாதனங்கள் சோதனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மனிதர்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் கதிர் வீச்சை வெளிப்படுத்தும் சாதனங்களை பிஞ்சு குழந்தைகளின் மடியில் விளையாடக் கொடுப்பது சரியா என்று சிந்தியுங்கள்.
மெதுவாய் கொல்லும் நஞ்சு
கல்வி பயில்வதற்கு இதுபோன்ற சாதனங்கள் அதிகம் தேவைப்படுவதினால் குழந்தைகளிடம் பெற்றோர்கள் இந்த சாதனங்கங்ளை பயன்படுத்த அனுமதித்து வருகின்றனர். வயர்லெஸ் கதிர்வீச்சுகள் மெதுவாய் கொல்லும் நஞ்சிற்கு சமம் என்பதை மறக்க வேண்டாம்.
விமானப் பயன்முறை
இருப்பினும் இவற்றின் ஆபத்தை நாம் நினைவில் கொண்டு கற்றல் நோக்கங்களுக்காகக் குழந்தைகளிடம் இந்தச் சாதனங்களை வழங்குவதற்கு முன் அவற்றை விமானப் பயன்முறைக்கு மாற்றி, பிறகு கொடுத்தால் பாதிப்புகள் மிகக் குறைவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
6 நிமிடங்கள் மட்டுமே கதிர்வீச்சை தாங்கிக்கொள்ள முடியும்
குறைந்தது சுமார் 7 பில்லியன் மொபைல் போன்கள் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. இவை அனைத்தும் 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அணைத்து மாடல் ஸ்மார்ட்போன்களும் இந்த அடிப்படையில் தான் தயாரிக்கப்படுகிறது, 99 கிலோ எடை கொண்ட ஒரு ஆண் வாய்ஸ் கால்ஸ் செய்யும் போது வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே கதிர்வீச்சை தாங்கிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு இந்த அளவு கதிர்வீச்சுகள் மிகவும் ஆபத்தானது.
செல் சவ்வுகளுக்கு தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு
மொபைல் போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மனிதனின் உடலில் உள்ள செல் சவ்வுகளிற்கு அதிக தீங்கை விளைவிக்கிறது. அதிலும் 2ஜி போன் இல் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளை விட 3ஜி போனில் இருட்னது வெளிப்படும் கதிர்வீச்சுகள் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நாம் தற்பொழுது 4ஜி போன்களைப் பயன்படுத்தி அடுத்தபடி ஆபத்தான 5ஜி நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.
3 வயதுக் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு
பெரியவர்களைக் காட்டிலும் 3 வயதுக் குழந்தைகளின் தலைக்குள், கதிர்வீச்சுகள் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
கருக்களை கொல்லும் கதிர்வீச்சு
குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை விட இந்தக் கதிர்வீச்சுகள் வயிற்றில் இருக்கும் கருக்களையும் பாதிக்கிறது என்பது தான் கூடுதல் அதிர்ச்சி தகவல்.
மொபைல் போன் கதிர்வீச்சைக் குறைப்பது எப்படி?
- உங்கள் உடல் அருகில் மொபைல் போடுவதைத் தவிர்க்கவும்.
- லவுட் ஸ்பீக்கர் அல்லது ஹெட்செட் மூலம் உங்கள் போனைப் பயன்படுத்தவும்.
- மொபைல் போன் பயன்பாட்டில் இல்லாதபோது விமானம் பயன்முறைக்கு மாற்றிக்கொள்ளவும்.
- கார், லிஃப்ட் மற்றும் ரயில்களில் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- இரவில் உறங்கும் போது மொபைல் போன்களை உங்களிடமிருந்து விலக்கி வைத்துக்கொள்ளவும்.
நம்மை நாமே காத்துக்கொள்ளுவோம்
பிஞ்சு குழந்தைகளை கொல்லும் அளவிற்குக் கதிர்வீச்சுகளை வெளிப்படுத்தும் இந்த மொபைல் போன்களின் ஆபத்து அறிந்து, இனிமேலாவது இவற்றின் பயன்பாட்டை குறைத்து நம்மை நாமே காத்துக்கொள்ளுவோம்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்