அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள 86 ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணியமர்த்த எதிர்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 20, 2019

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள 86 ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணியமர்த்த எதிர்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அண்ணாமலை பல்கலையில் உபரியாக உள்ள 86 ஆசிரியர்களை தமிழகத்திலுள்ள அரசு கலை கல்லூரிகளில் பணியமர்த்துவது நியமன விதிமுறைகளுக்கு முரணானது என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மிகையாக உள்ள 86 ஆசிரியர்களை தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் மற்றம் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் 3 ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதாக கல்லூரி கல்வி இயக்குநர் கடந்த 13ம் தேதி வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார். அதன்படி 86 அண்ணாமலை பல்கலை ஆசிரியர்களை தமிழகத்திலுள்ள பல்வேறு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியமர்த்த கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உயர்கல்வித்துறையின் முடிவிற்கு கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அரசு கல்லூரி ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: நலிவடைந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு கடந்த 2012ம் ஆண்டு தன்வசப்படுத்திய பின், கடந்த 3 ஆண்டுக்கு முன் அங்குள்ள 420 மிகை ஆசிரியர்களை, தமிழ்நாடு கலை, அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. தற்போது மேலும் 86 பேரை நியமித்துள்ளது. பொதுவாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியராக நியமனம் செய்ய எம்.பில்., பிஎச்டி. படித்திருக்க வேண்டும். விரிவுரையாளர்களுக்கான தேசிய தர நிர்ணயம் மற்றும் மாநில தர நிர்ணய தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றிருக்க வேண்டும். அரசு கல்லூரிகளுக்கான ஆசிரியர்களை, ஆசிரியர் தேர்வாணையம் மூலம், இட ஒதுக்கீடு முறையில் நியமிப்பதுதான் வழக்கம். இவற்றுக்கு மாறாக பல்கலையில் இருந்து நேரடியாக நியமிப்பது முரணானது. இத்தகைய நியமனத்தால், தேசிய, மாநில தர நிர்ணய தேர்வெழுதி வெற்றி பெற்று, அரசு கல்லூரி பணிக்காக காத்திருப்போருக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகும். எனவே, இத்தகைய நியமனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews