814 கணினி ஆசிரியர் விரைவில் நியமனம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 22, 2019

814 கணினி ஆசிரியர் விரைவில் நியமனம்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை துவங்கும்படி, ஆசிரியரின் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக பள்ளி கல்வி துறை கடிதம்
அரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை துவங்கும்படி, ஆசிரியரின் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக பள்ளி கல்வி துறை கடிதம் அனுப்பியுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மேல்நிலை பள்ளிகளில், 1998ல், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாட பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பாடங்களை நடத்த, முதலில், 'டிப்ளமோ - கம்ப்யூட்டர் சயின்ஸ்' படிப்பை முடித்தவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட்., முடித்த பட்டதாரிகள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
தற்போது, 2,500 பேர் பணியாற்றும் நிலையில், காலியாக உள்ள, 814 இடங்களுக்கு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்து உள்ளது.இதற்கு, எம்.எஸ்சி., முதுநிலை படிப்புடன், பி.எட்., படிப்பு முடித்தவர்களை மட்டுமே நியமிக்க, முடிவு செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், டி.ஆர்.பி.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடத்தில், 814 காலி இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்வி துறையின், புதிய அரசாணையின் படி, தேர்வு நடத்தி, நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews